நீண்ட ஆயுள், நலமான வாழ்க்கை

மத்திய சேம நிதிக் கழகம் வழங்கும் விளம்பரச் செய்தி

மத்திய சேம நிதி சேமிப்பும் நீங்களும்

பெரும்பான்மை சிங்கப்பூரர்கள் அதிக வயது வரை உயிர் வாழும் தற்போதைய சூழலில், உங்கள் ஓய்வுக் காலத்தின்போது உங்கள் மத்திய சேம நிதி (மசேநி) சேமிப்பு எவ்வாறு உங்களுக்கு- குறிப்பாக அடிப்படைத் தேவைகளிலிருந்து, சுகாதார, வீட்டுச் செலவுகளுக்கு உதவும்? இதோ உங்களது கேள்விகள் சிலவற்றுக்கான பதில்கள்

எனது ஓய்வுக்காலக் கணக்கில் உள்ள வழங்குதொகை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?

ஓய்வுக்காலத் தொகைத் திட்டம் (RSS) அல்லது மசேநி லைஃப் (CPF LIFE), எனப்படும் மசேநி தேசிய நீண்ட ஆயுள் காப்புறுதித் திட்டம் என்ற இரண்டு திட்டங்களில் நீங்கள் எந்தத் திட்டத்தில் இருக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். ஓய்வுக்காலத் தொகைத் திட்டம் (RSS) வழியாக உறுப்பினர்களின் சேமிப்பு தீரும் வரை மாதாந்தர வழங்குதொகையைப் பெறலாம். மசேநி லைஃப் திட்டம் (CPF LIFE) உறுப்பினர்களின் வாழ்நாள் முழுவதும் மாதாந்தர வழங்குதொகையை வழங்கும்.

நீங்கள் 1958ஆம் வருடத்திற்கு முன் பிறந்திருந்தால், நீங்கள் ஓய்வுக்காலத் தொகைத் திட்டத்தின் கீழ் இருப்பீர்கள். நீங்கள் 1958ஆம் ஆண்டில் அல்லது அதற்குப் பின் பிறந்து, ஓய்வுக்காலக் கணக்கில் கீழ்க்காணும் சேமிப்புத் தொகை இருந்தால், மசேநி லைஃப் (CPF LIFE) திட்டத்தில் இணையலாம்.

1 ஜனவரி 2015 முதல் 30 ஏப்ரல் 2016 வரை நீங்கள் 55 வயதை அடைந்திருந்தால் நீங்கள் 1 மே 2016 அல்லது அதற்குப்பின் 55 வயதை அடைந்திருந்தால்

நீங்கள் 55 வயதை எட்டும்போது, உங்களது ஓய்வுக்காலக் கணக்கில் குறைந்தது $40,000 இருக்க வேண்டும்; அல்லது

நீங்கள் 65 வயதை எட்டுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு உங்களது ஓய்வுக்காலக் கணக்கில் குறைந்தது $60,000 இருக்க வேண்டும்.

நீங்கள் 65 வயதை எட்டுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு உங்களது ஓய்வுக்காலக் கணக்கில் குறைந்தது $60,000 இருக்க வேண்டும்.

நீங்கள் மசேநி லைஃப் (CPF LIFE) திட்டத்தில் இடம்பெறாமல் இருந்தால், 80 வயதை எட்டுவதற்கு முன் எந்த நேரத்திலும் விண்ணப்பம் செய்து இணைந்துகொள்ளலாம்.

ஓய்வுக்காலத் தொகைகள் ஏன் உயர்ந்துகொண்டே உள்ளன?

கடந்த 1990ஆம் வருடங்களில் ஒரு காப்பியும் வாட்டிய ரொட்டியும் சுமார் $1.50க்கு கிடைக்கும். இன்று, அதே காப்பியும் வாட்டிய ரொட்டியும் $3.00 வரை விற்கப்படலாம். இவை அன்றாட பணவீக்கத்தின் எடுத்துக்காட்டாகும். பொதுவாக விற்பனை விலை கூடும்போது, நம்மிடம் உள்ள பணத்தைக் கொண்டு குறைவானவற்றையே நாம் வாங்கமுடியும்.

இவற்றுடன் மேம்பட்ட வாழ்க்கைத் தரமும், அதிகரிக்கும் ஆயுட்காலமும் வருங்கால சந்ததியினர் அவர்களது ஓய்வுக்காலத்தைச் சமாளிக்க அதிகமாக செலவிடவைக்க நேரிடும். ஓய்வுக்காலத் தொகையைச் சரிசெய்துகொள்வது மாதந்தோறும் பெறப்படும் மாதாந்தர வழங்குதொகைகள் உங்களது வாழ்க்கைத் தேவைகளுக்கு ஓய்வுக்காலத்தில் போதுமானதாக இருப்பதை உறுதிசெய்கின்றது.

முழுத் தொகை கடந்த 1987ஆம் ஆண்டில் அறிமுகமானபொழுது (குறைந்தபட்சத் தொகை) $30,000 ஆகத் தான் இருந்தது. அப்படியே இருந்திருந்தால் இன்று மாதாந்தர வழங்குதொகையாக $300 தான் பெற முடியும் அதுவும் ஓய்வுக்காலக் கணக்கில் இருக்கும் சேமிப்பு தீரும் வரை.

இதை ஒப்பிடுகையில் இன்றைய முழுத் தொகை $181,000. இதன்வழி வழங்குதொகையைப் பெறத் தகுதிபெறும் 65 வயதிலிருந்து வாழ்நாள் முழுவதும் $1,440 மாதாந்தர வழங்குதொகையைப் பெறலாம்.

மசேநி லைஃப் (CPF LIFE) திட்டத்தின் கீழ் எனக்கு எவ்வளவு மாதாந்தர வழங்குதொகை கிடைக்கும்? அந்த வழங்குதொகை எனது ஓய்வுக்காலத் தேவைகளுக்கு போதுமானதாக இருக்குமா?

பொதுவாக, உங்களது மசேநி ஓய்வுக்காலச் சேமிப்பைப் பயன்படுத்தி மசேநி லைஃப் (CPF LIFE) ) திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் செலுத்தும் சந்தாத் தொகையைப் பொறுத்து, உங்களது மாதாந்தர வழங்குதொகை அமையும்.

உங்களது ஓய்வுக்காலக் கணக்கில் (Retirement Account RA) அதிகமான தொகையை ஒதுக்கி வைத்தால் நீங்கள் பெறும் மாதாந்தர வழங்குதொகையும் பொதுவாகக் கூடுதலாகும்.

55 வயதில் ஓய்வுக்காலக் கணக்கில் நீங்கள் ஒதுக்கிவைத்திருக்கும் சேமிப்பைப் பொறுத்தும், அதற்கு நேராக ஒத்திருக்கும் 65 வயதில் செலுத்தம் மசேநி வேண்டிய மசேநி லைஃப் (CPF LIFE) சந்தாத் தொகையைப் பொறுத்தும், இந்த வழங்குதொகைகள் கணக்கிடப்படுகின்றன.

வெவ்வேறு மசேநி லைஃப் திட்டங்கள் எவ்வளவு வழங்குதொகையை வழங்கும் அல்லது நீங்கள் விரும்பும் மாதாந்தர வழங்குதொகையை எப்படி அடையலாம் போன்றவற்றை அறிந்துகொள்ள மசேநி லைஃப் மதிப்பிடும் (CPF LIFE Estimator) சேவையைப் பயன்படுத்துங்கள்.

இந்த இணைப்பை அணுகி மேல்விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்:

https://www.cpf.gov.sg/eSvc/Web/Schemes/LifeEstimator/LifeEstimator

முரசிடம் கேளுங்கள்: உங்கள் கேள்வி, எங்கள் பதில்

மத்திய சேம நிதி தொடர்பில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் உள்ளனவா?

'முரசிடம் கேளுங்கள்' என்ற புதிய கேள்வி பதில் தொடருடன் எங்களோடு இணைக.

கேள்விகளை tamilmurasu@sph.com.sg எனும் இணைய முகவரிக்கு அனுப்புங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!