காதலியைக் கொன்றவருக்கு மரண தண்டனை

காதலியைக் கொன்றவருக்கு மரண தண்டனை

3 mins read

காத­லியைக் கொன்ற பங்­ளா­தே­ஷிய ஊழி­ய­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

2018ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 30ஆம் தேதி மாலை கேலாங் டிரா­கன் ஹோட்­ட­லில் தமது காத­லி­யான இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண் நூர்­ஹி­டா­யாத்தி வார்த்­தோனோ சுரா­தா­வின் கழுத்தை நெரித்­துக் கொன்­றார் 31 வயது அக­மது சலிம்.

திரு­வாட்டி நூர்­ஹி­டா­யா­த்தியை அக­மது கொலை செய்­தது சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறிய நீதி­த்துறை ஆணையர் மேவிஸ் சியோன், அவ­ருக்கு மரண தண்­ட­னையை விதித்­தார். அக­ம­துக்­கும் திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்­திக்­கும் இடை­யி­லான உறவு அவர்­கள் இரு­வ­ரும் 2012ஆம் ஆண்டு மே மாதம் தற்­செ­ய­லா­கச் சந்­தித்­துக்­கொண்ட பிறகு தொடங்­கி­யது. 2018ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் திரு­ம­ணம் செய்­து­கொள்ள இரு­வ­ரும் முடி­வெ­டுத்திருந்தனர்.

இந்­நி­லை­யில், 2018ஆம் தேதி நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து பங்­ளா

­தே­ஷைச் சேர்ந்த ஷமின் ஷமி­சுர் ரஹ்­மா­னு­டன் திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்தி தொடர்பு வைத்­து­க் கொள்­ளத் தொடங்­கி­னார்.

திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்தி தம்மை ஏமாற்­று­வ­தா­கச் சந்­தே­கித்த அக­மது இது­கு­றித்து அவ­ரி­டம் பேசி­னார். அப்­போது தாம் இன்­னோர் ஆட­வ­ரு­டன் தொடர்பு வைத்­தி­ருப்­பதை திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்தி ஒப்­புக்­கொண்­டார்.

இதை­ய­டுத்து, திரு­ம­ணத்­துக்­காக தமக்­குப் பெண் தேடும்­படி தமது தாயாரை அக­மது கேட்­டுக்­கொண்­டார்.

அவ­ரது தாயா­ரும் அவ­ருக்­குப் பெண் தேடி திரு­ம­ணத்­துக்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­தார். திரு­ம­ணம் 2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் நடை­பெ­று­வ­தாக இருந்­தது. ஆனால் சில மாதங்­கள் கழித்து, அக­ம­தும் திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்­தி­யும் மீண்­டும் ஒன்­று­சேர்ந்­த­னர். இருப்­பினும், அவர்­க­ளுக்­

கி­டையே அடிக்­கடி வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்தி வேறொரு ஆட­வ­ரு­டன் தொடர்பு வைத்­தி­ருந்­ததே இதற்­குக் கார­ணம் என்று நம்­பப்­ப­டு­கிறது. ஒரு­முறை ஹோட்­டல் அறை­யில் இருந்­த­போது துண்டு ஒன்­றை

திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்­தி­யின் வாய் மேல் வைத்து அக­மது அழுத்­தி­னார். திருவாட்டி நூர்ஹிடாயாத்தி எதிர்த்­துப் போரா­டி­ய­தும் அவ்­வாறு செய்­வதை அக­மது நிறுத்­தி­னார்.

இந்­நி­லை­யில், பங்­ளாதே­ஷைச் சேர்ந்த ஹனிஃபா முகம்­மது அபு­வு­டன் திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்­திக்­குப் பழக்­கம் ஏற்­பட்­டது.

தமக்­குப் புதிய காத­லன் இருப்­ப­தாக அக­ம­தி­டம் தெரிவித்த திருவாட்டி நூர்ஹிடாயாத்தி, பங்­ளா­தே­ஷில் பார்த்­து­வைத்த பெண்­ணையே அக­மது திரு­ம­ணம் செய்து ­கொள்ள வேண்­டும் என்று கூறி­னார். அக­ம­து­ட­னான உறவை அவர் முறித்­துக்­கொண்­டார்.

இந்­நி­லை­யில், சில நாட்­கள் கழித்து இரு­வ­ரும் சந்­தித்து ஹோட்­ட­லில் பாலி­யல் உறவு கொண்­ட­னர். திரு ஹனி­ஃபா­வு­ட­னான உறவை முறித்­துக்­கொள்ள திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்தி மறுத்­ததை அடுத்து, துண்­டைப் பயன்

­ப­டுத்தி அக­மது அவ­ரது கழுத்தை

நெரித்தார்.

திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்­தி­யின் காது­கள் வழி­யாக இரத்­தம் கசிந்­ததை அடுத்து, கூடு­தல் பலம் பயன்­ப­டுத்தி அக­மது அவ­ரது கழுத்தை நெரித்­தார். இதில் திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்தி சுய­நி­னைவு இழந்­தார். அத்­து­டன் நிறுத்­தி­

வி­டா­மல் தமது காத­லி­யின் மர­ணத்தை உறுதி செய்ய தாம் கொண்டு வந்த கயிற்­றைப் பயன்

­ப­டுத்தி அவ­ரது கழுத்தை மீண்­டும் அவர் நெரித்­தார். திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்­தி­யின் உயி­ரற்ற உடலை அங்­கேயே விட்டு ­விட்டு தாம் தங்­கி­யி­ருந்த சுங்கை தெங்கா தங்­கும் விடு­திக்­கு அவர் சென்­றார்.

அங்கு சக ஊழி­யர் காலிக் முகம்­மது அப்­துல் என்­ப­வ­ரி­டம் $1,000 கொடுத்து பங்­ளா­தே­ஷில் உள்ள தமது குடும்­பத்­துக்­கு அனுப்­பி­வைக்­கும்­படி கேட்­டுக்­கொண்­டார். தாம் கொலை செய்­து­விட்­ட­தாக திரு காலிக்­கி­டம் அக­மது தெரி­வித்­தார்.

அன்­றி­ரவு 10.15 மணி அள­வில் ஹோட்­டல் அறை­யில் திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்தி மாண்டு கிடப்­பதை ஹோட்­டல் ஊழி­யர் ஒரு­வர் கண்­டு­பி­டித்­தார்.

மறு­நாள் காலை 10.45 மணி அள­வில் அக­மது கைது செய்­யப்­பட்­டார். புதிய காத­ல­னு­ட­னான உறவை முறித்­துக்­கொள்ள திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்தி மறுத்­தால் அவ­ரைக் கொலை செய்ய அக­மது முன்­கூட்­டியே திட்­ட­மிட்­டதை அவர் ஹோட்­டல் அறைக்கு கயிற்­றைக் கொண்டு சென்­றது நிரூ­பிப்­ப­தாக நீதி­பதி கூறி­னார். அக­ம­தின் கோபத்தை திரு­வாட்டி நூர்­ஹி­டா­யாத்தி தூண்­டி­ய­தால்­தான் அக­மது அவ­ரது கழுத்தை நெரித்­த­தாக தற்­காப்பு வழக்­க­றி­ஞர் கூறி­யதை நீதி­பதி ஏற்க மறுத்­தார்.

தீர்ப்பை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்ய தங்கள் கட்­சிக்­கா­ரர் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அக­ம­தின் வழக்­க­றி­ஞர்­கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்