'பள்­ளிக்­குத் திரும்­பும் மாண­வர்க­ளுக்கு 'டிரேஸ்­டு­கெ­தர்' கருவி கட்­டா­ய­மல்ல'

2 mins read
b834d7ec-8431-4d43-8447-30e3dc752200
நவம்பர் 29ஆம் தேதி 'டிரேஸ்டுகெதர்' கருவியைப் பயன்படுத்தி 'சேஃப்என்ட்ரி' முறையில் டௌன்டவுன் உல்லாச விடுதிக்குள் நுழைந்த சிறுவன். இந்த முறை பள்ளிகள் திறக்கப்படும்போது கட்டாயமாக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: சாவ் பாவ் -

"பள்­ளிக்­குத் திரும்­பும் மாண­வர் ­க­ளுக்கு 'டிரேஸ்­டு­கெ­தர்' கருவி கட்­டா­ய­மல்ல, அத­னால் மாண­வர்­கள் அதி­கம் கவலை கொள்­ளத் தேவை­யில்லை என்று கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

நாடு முழு­வ­தும் 'டிரேஸ்­டு­ கெதர்' கருவி விநி­யோ­கிக்­கப்­பட்ட பிறகு அது கட்­டா­ய­மாக்­கப்­படும் என்று பெற்­றோர்­க­ளுக்­கு அவர் உறு­தி­ய­ளித்­தார்.

"உங்­க­ளு­டைய குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளுக்கு அந்­தக் கருவி வந்து சேர­வில்­லை­யெ­னில் கவ­லை­கொள்­ளத் தேவை­யில்லை. பள்­ளி­கள் திறக்­கப்­ப­டும்­போது அது கட்­டா­ய­மாக்­கப்­ப­டாது," என்று நேற்று காலை வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் அவர் விளக்­கி­யி­ருந்­தார்.

கொவிட்-19, 3வது கட்­டத் தளர்­வுக்­குப் பிறகு அடுத்த ஆண்டு ஜன­வரி 4ஆம் தேதி தொடக்­கப்­பள்­ளி­கள், உயர்­நி­லைப் பள்­ளி­கள் திறக்­கப்­ப­டு­கின்­றன.

தொடக்­கக்­கல்­லூ­ரி­கள், மில்­லெ­னியா கல்­விக் கழ­கம் ஜன­வரி 29ஆம் தேதி­ திறக்­கப்ப­டு­கிறது.

இதன் தொடர்­பில் கல்வி அமைச்சு தமது இணை­யப் பக்­கத்­தில் பல்­வேறு வழி­காட்­டி­களை வெளி­யிட்­டி­ருந்­தது. இதையொட்டி அமைச்­சர் சுன் சூலிங்­ விளக்­கம் அளித்­துள்­ளார்.

அமைச்­சின் வழி­காட்­டி­யின்­படி ஏழு வய­துக்கு மேற்­பட்ட மாண­வர்­கள் அனை­வ­ரும் 'டிரேஸ்­டு ­கெ­தர்' கருவி அல்­லது அதன் கைபேசி செய­லியை பள்­ளி­களில் பயன்­ப­டுத்த வேண்­டும்.

இருந்­தா­லும் சமூக மன்­றம் அல்­லது சமூக நிலை­யங்­க­ளி­லி­ருந்து 'டிரேஸ்­டு­கெ­தர்' கருவி அனைத்து மாண­வர்­களும் பெற்ற பிறகு அத­னைப் பயன்­ப­டுத்தி உள்ளே நுழை­யும் 'சேஃப்என்ட்ரி' முறை அம­லாக்­கப்­படும். அது­வரை கைபேசிச் செய­லி­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

'டிரேஸ்­டு­கெ­தர்' கருவியை மறந்து விட்­டலோ, வேறு ஏதா­வது ஓர் இடத்­தில் வைத்­து­விட்­டாலோ, கைபே­சி­யில் அந்­தச் செயலி இல்­லா­விட்­டாலோ மாண­வர்­கள் பள்­ளிக்­குள் நுழைய அனு­மதி மறுக்­கப்­ப­டாது என்று அமைச்­சின் இணை­யப் பக்­கத்­தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

நாட்­டில் உள்ள 38 சமூக நிலை­யங்­களில் ஏதா­வது ஒன்­றி­லி­ருந்து 'டிரேஸ்­டு­கெ­தர்' கருவி குடி­யி­ருப்­பா­ளர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று அரசு அறி­வித்­தி­ருந்­தது.

ஆனால் கொவிட்-19 சூழ­லில் மக்­கள் நெருக்­க­மாக நீண்ட வரி­சை­யில் நின்­ற­தால் படிப்­ப­டி­யாக அதனை விநி­யோ­கிக்க அரசு முடிவு செய்­தது.

தற்­போது தங்­க­ளு­டைய வட்­டா­ரத்­தில் உள்ள சமூக நிலை­யங்­களில் விநி­யோ­கித்­தால் மட்­டுமே குடி­யி­ருப்­பா­ளர்­கள் அதனைப் பெற்றுக்­கொள்ள இயலும்.

ஏழு வய­துக்கு மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள் உட்­பட அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­களுக்கும் தலா ஒரு கருவி வழங்கப்படும்.

நேற்று முன்தினம் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றிய பிர­த­மர் லீ சியன் லூங், இம்­மா­தம் 28ஆம் தேதி 3வது கட்­டத் தளர்­வுக்­குள் சிங்­கப்­பூர் நுழை­வது குறித்து பேசி­யி­ருந்­தார். இந்த நிலையில் அமைச்­சர் சுன் சூலிங்­கின் கருத்து வெளி­யா­கி­யுள்­ளது.

"முந்­தைய நாள் இர­வில் 30 தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் நான் பங்­கேற்­ற­போது அனை­வ­ரும் புதிய கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்கு நம்­பிக்­கை­யும் ஊக்­க­மும் அளித்­த­னர்," என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­ச­ரு­மான சுன் சூலிங் நேற்று கூறினார்.

"பாது­காப்­பாக இருங்­கள், விழிப்­பு­டன் இருங்­கள். நாம் அனை­வ­ரும் ஒன்று சேர்ந்து சமா­ளிக்க முடி­யும்," என்­றார் அவர்.