வழக்கறிஞர் ரவி மீது அவதூறு குற்றச்சாட்டு

1 mins read
281318b5-950b-4f29-b300-260893796e16
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத்திற்கு எதிராக அவதூறு பரப்பியதாக வழக்கறிஞர் எம்.ரவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திரு ரவி தனது ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் சண்முகம் தனக்குள்ள அதிகாரம் குறித்து பேசியதாக குறிப்பிட்டிருந்தார். திரு சண்முகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் திரு ரவி தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது

வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் ஜனவரி 6ஆம் தேதி இடம்பெறும்.

அவதூறு பரப்பும் கிரிமினல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்