மின்னிலக்கமயம், சுகாதாரம்: வலுவான நிலையில் சிங்கப்பூர்

2 mins read
c98a6adf-3cc6-4fa6-979b-a058d18365f9
படம்: சிஎம்ஜி -

மின்­னி­லக்­க­ம­ய­மா­தல், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, சமூ­கப் பாது­காப்­புக் கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றில் சிங்­கப்­பூர் வலு­வாக இருப்­ப­தாக உல­கப் பொரு­ளி­யல் மன்றம் (டபிள்­யூ­இ­எஃப்) தெரி­வித்­துள்­ளது.

கடந்த 40 ஆண்­டு­க­ளாக ஒவ்வோர் ஆண்டும் 'உல­கப் போட்­டித்­தன்மை அறிக்கை'யை வெளி­யிட்டு வரும் உல­கப் பொரு­ளி­யல் மன்றம், முதன்­மு­றை­யாக இவ்­வாண்டு அந்த நடை­மு­றையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறது. மாறாக, ஒரு நாட்­டின் எதிர்­காலப் பொரு­ளி­யல் உரு­மாற்­றத்­திற்கு வித்­தி­டும் அம்­சங்­கள் மீது அது தன் கவ­னத்­தைத் திருப்பி­ உள்­ளது.

அர­சாங்­கங்­கள் முன்­னு­ரிமை அளிக்­க­வேண்­டிய 11 துறை­களை அடை­யா­ளம் கண்டு, சிறப்பு வரு­டாந்­திர அறிக்­கையை மன்றம் நேற்று வெளி­யிட்­டது.

வலு­வான சமூ­கப் பாது­காப்­புக் கட்­ட­மை­ப்பையும் துடிப்­பான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்­பு­க­ளை­யும் கொண்­டு­ள்ளதால், சிங்­கப்­பூர் போன்ற மின்­னி­லக்கரீதியாக முன்­னே­றிய நாடு­கள் கொவிட்-19 நோய்ப் பர­வல் தாக்கத்தைச் சமா­ளிக்­கும் வகையில் நல்ல நிலை­யில் உள்ளன என அவ்வறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

நிறு­வ­னங்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்­கேற்ற உயர்­கல்வி முறை­யைக் கொண்­டுள்­ள­தால் மனித மூல­தன வளர்ச்­சி­யில் நூற்­றுக்கு 79 புள்­ளி­க­ளைப் பெற்று சிங்­கப்­பூ­ரும் பின்­லாந்­தும் 2ஆம் இடத்­தில் உள்­ளன.

சிங்கப்பூர், தைவான், பின்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவை வலுவான நிதிநிலையைக் கொண்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

துடிப்­பான மின்­னி­லக்­கச் சட்ட அமைப்­பைக் கொண்­டுள்ள முதல் பத்து நாடு­களில் சிங்­கப்­பூ­ருக்கு மூன்­றா­மி­டம் கிடைத்­துள்­ளது. தக­வல் தொடர்­புத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தி­லும் மின்­னி­லக்­கத் தேர்ச்­சி­க­ளி­லும் சிங்­கப்­பூர் ஆறாம் இடத்­தைப் பிடித்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­ப­தில் சிர­மங்­களை எதிர்­நோக்­கும் முதல் 30 நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று என்று அந்த அறிக்கை குறிப்­பிட்­டி­ருக்­கிறது.