6 மாதங்களில் 47,000 உள்ளூர்வாசிகளுக்கு வேலை கிடைத்தது

6 மாதங்களில் 47,000 உள்ளூர்வாசிகளுக்கு வேலை கிடைத்தது

2 mins read
2cefc2e0-9d54-4aa4-bb58-480cc24718c7
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எஸ்­ஜி­ஒற்­றுமை வேலை­கள், திறன்­கள் தொகுப்­புத் திட்­டத்­தின்­கீழ், இவ்­வாண்­டின் ஏப்­ரல் முதல் அக்­டோ­பர் வரை­யி­லான ஆறு மாத காலத்­தில், வேலை தேடிய உள்­ளூர்­வா­சி­களில் ஏறத்­தாழ 60,000 பேருக்கு வேலை, பயிற்சி வாய்ப்­பு­கள் கிட்­டின.

அவர்­களில் 80 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்­டோர், அதா­வது கிட்­டத்­தட்ட 47,000 பேர் வேலை­யில் அமர்த்­தப்­பட்­ட­னர். இந்­தக் கால­கட்­டத்­தில் குறைந்­தது 40,000 பேருக்கு வேலை பெற்­றுத் தர­வேண்­டும் என்று தேசிய வேலை­கள் மன்­றம் நிர்­ண­யித்த இலக்­கைக் காட்­டி­லும் இது அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அவர்­களில் பத்­தில் அறு­வருக்கு, அதா­வது 27,280 பேருக்கு நீண்­ட­கால வேலை கிடைத்­த­தாக மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட, இவ்­வாண்­டின் இறுதி வேலை நில­வர அறிக்கை தெரி­வித்­தது.

நீண்­ட­கால வேலை­ பெற்றோரில் 56%, 'பிஎம்­இடி' எனப்­படும் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்நுட்­பர்­கள். குறு­கிய கால வேலை­களில் அமர்த்­தப்­பட்­டோ­ரில் 42 விழுக்­காட்­டி­னர் 'பிஎம்­இடி' பிரி­வி­னர்.

வேலை தேடிய நாற்­பது வய­துக்கு மேற்­பட்­டோ­ரில் கிட்­டத்­தட்ட பாதிப் பேருக்கு வேலை கிடைத்­தது என்று அமைச்சு குறிப்­பிட்­டது. அத்­து­டன், வேலை தேடிய அவ்­வ­ய­துப் பிரி­வி­ன­ரில் 35 விழுக்­காட்­டி­னர், நிறு­வ­னங்­கள் வழங்­கிய வேலைப் பயிற்சி, இணைப்­புத் திட்­டங்­கள், பயிற்சி வாய்ப்­பு­கள் போன்ற வழி­களில் பல­ன­டைந்­த­னர்.

இந்­நி­லை­யில், "இன்­னும் செய்ய வேண்­டிய பணி­கள் ஏரா­ள­மாக இருக்­கின்­றன. இது கொண்­டாடு­வ­தற்­கான தரு­ண­மில்லை என்­ற­போ­தும், ஓர­ள­விற்கு வலு­வா­கக் காலூன்­றி இருக்கிறோம் எனும் நிலையை எட்டி இருப்­பது மகிழ்ச்சி தரு­கிறது. எங்­க­ளது முயற்­சி­களை இரட்­டிப்­பாக்கி, முடிந்த அளவிற்கு அதிகமான நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவ விரும்­பு­கி­றோம்," என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ கூறி­யி­ருக்­கி­றார்.

'யுஓபி' வங்­கிக்கு நேற்று சென்­றி­ருந்­த­போது ஊட­கத்­தி­ன­ரி­டம் பேசிய திரு­வாட்டி டியோ, வேலை­வாய்ப்­புச் சந்­தையை நிலைப்­ப­டுத்த உதவ எடுத்த நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மனி­த­வள அமைச்சு, என்­டி­யுசி, சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய முத்­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வத்­திற்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

இன்­னும் 123,000க்கும் மேற்­பட்ட வேலை, பயிற்சி வாய்ப்­பு­கள் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. குறிப்­பாக, தக­வல் தொடர்பு (21,000), உணவு சேவை­கள் (11,300), நிபு­ணத்­துவ சேவை­கள் (11,000), உற்­பத்தி (10,800), சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு (7,200) ஆகிய துறை­களில் அதி­க­மான வேலை, பயிற்சி வாய்ப்­பு­க­ள் இருக்­கின்­றன.