அதிபர் ஹலிமா யாக்கோப்: மனநலப் பிரச்சினைகள் உள்ள மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் மேலும் உதவலாம்

மன­ந­லப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் உதவி நாடு­வ­தில் சங்­க­டங்­களை எதிர்­நோக்­கக்­கூ­டிய மாண­வர்­களுக்­குப் பாது­காப்­பான ஏற்­பா­டு­களை செய்­து தரு­வ­தில் கல்வி நிலை­யங்­கள் மேலும் பங்­காற்ற முடி­யும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்து இருக்­கி­றார்.

ரிபப்­ளிக் பல­துறை தொழிற்­கல்­லூ­ரிக்கு வருகை அளித்த அதி­பர், தங்­க­ளுயை மன­ந­லப் பிரச்­சி­னை­களை விரி­வு­ரை­யா­ளர்­க­ளி­டம் அல்­லது ஆசி­ரி­யர்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­லும் துணிவு மாண­வர்­க­ளி­டையே இல்­லா­மல் இருக்­கக்­கூ­டும் என்று தெரி­வித்­தார்.

அல்­லது தங்­கள் பிரச்­சி­னையை வெளியே சொன்­னால் தங்­க­ளுக்கு சங்­க­ட­மான நிலை ஏற்­படும் என்று மாண­வர்­கள் நினைக்­கக்­கூ­டும்.

இத்­த­கைய மாண­வர்­க­ளுக்­குப் பாது­காப்­பான ஒரு சூழலை ஏற்­படுத்­தித் தர வேண்­டிய தேவை உள்ளதாக அதி­பர் கூறினார்.

அப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ­லில் தனக்கு மன­ந­லப் பிரச்­சினை இருப்­பதை உணர்ந்­து­கொண்டு அதற்கு உதவி கிடைக்­கும் என்­ப­தால் வழக்­க­மாக கல்­வி­யில் சிறப்­பாக செயல்­பட முடி­யும் என்ற நம்­பிக்கை மாண­வ­ரி­டையே ஏற்­படும் என்று அதி­பர் தெரி­வித்­தார்.

ரிபப்­ளிக் தொழிற்­கல்­லூ­ரி­யின் மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தைப் பார்­வை­யிட்ட அவர், ஊட­கத்­தி­டம் பேசி­னார். மன­ந­லப் பிரச்­சி­னை­களைக் கொண்­டுள்ள, சிறப்புக் கல்வி உதவி தேவைப்­ப­டக்­கூ­டிய மாண­வர்­க­ளுக்கு உத­வும் அந்த நிலை­யம், 208 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் அமைந்து இருக்­கிறது. அது புதுப்­பிக்­கப்­பட்டு சென்ற ஆண்டு ஜூன் மாதம் திறக்­கப்­பட்­டது.

அந்த நிலை­யத்­தில் இரண்டு மாநாட்டு அறை­கள் உள்­ளன. ஆலோ­சனை அறை­கள் ஐந்து இருக்­கின்­றன. தொழில்­நுட்ப உதவி நூல­கம் ஒன்­றும் உள்­ளது. சிறப்பு உதவி தேவைப்­ப­டக்­கூ­டிய மாண­வர்­கள் அங்கு பல சாத­னங்­க­ளைப் பெற்று பயன் அடைய முடி­யும்.

அந்த நிலை­யத்­தில் இரண்டு பிரத்­தி­யேக அறை­களும் இருக்­கின்­றன. மனப் பதற்­றம் கார­ண­மா­க­வும் பயம் கார­ண­மா­க­வும் பாதிக்­கப்­பட்டு உள்ள மாண­வர்­கள் மனம் அமைதி அடைய அந்த அறை­கள் உத­வும். அதி­பர் ஹலிமா, அக்கல்­லூ­ரி­யின் வேளாண்மைத் தொழில்­நுட்பப் பரி­சோ­த­னைக் கூடத்­தை­யும் சுற்­றிப் பார்த்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!