அதிகளவில் போதைப்பொருள் சிக்கியது; 6 பேர் கைதாயினர்

அதிகளவில் போதைப்பொருள் சிக்கியது; 6 பேர் கைதாயினர்

1 mins read
dadc122f-a554-4681-a51e-954e5abccb64
படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் டிசம்­பர் 16 மற்­றும் 17ஆம் தேதி­களில் பல்­வேறு பகு­தி­களில் மேற்­கொண்ட நட­வடிக்­கை­களில் ஆறு சந்­தே­கப்­பேர்­வழி­கள் பிடி­பட்­ட­னர்.

அவர்­களில் மூன்று பேர் ஆண்­கள், மூன்று பேர் பெண்­கள். கைதா­ன­வர்­க­ளுக்கு வயது 28 முதல் 55 வரை என்று இந்­தப் பிரிவு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

மொத்­தம் சுமார் 4,158 கிராம் கஞ்சா, 466 கிராம் ஹெரா­யின், 999 கிராம் ஐஸ், 753 கிராம் கெட்­ட­மின், 105 எக்­ஸ்டசி மாத்­தி­ரை­கள், 285 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள் உள்­ளிட்ட பல­வும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. இவற்­றின் மதிப்பு $475,000க்கும் அதி­கம் என்று அறிக்கை குறிப்­பிட்­டது. பிடி­பட்ட சந்­தே­கப்­பேர்­வ­ழி­கள் அனை­வ­ரும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.

ஆபத்­தான ஆயு­தங்­களும் பல்­வேறு போதைப்­பொ­ருள் சாத­னங்­களும் பிடி­பட்­ட­தா­க­வும் இந்­தப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

பாசிர் ரிஸ் டிரைவ் 3, பீச் ரோடு, மெக்­பர்­சன் பகு­தி­யில் இருக்­கும் கடை வீடு, ஆர்ச்­சர்ட் பொலிவார்ட், டர்­விட் ரோடு, அங் மோ கியோ ஆகிய இடங்­களில் சந்­தே­க­ந­பர்­கள் சிக்­கி­னர்.

பிடி­பட்ட கஞ்சா, 595 பேரை அடி­மை­யாக்­கி­வி­டும் அள­வுக்கு இருந்தது. அதே­போல, 220 புழங்­கி­க­ளுக்­குப் போது­மான ஹெரா­யி­னும் 570 புழங்­கி­க­ளுக்கு ஈடான ஐஸ் போதைப்­பொ­ரு­ளும் பிடி­பட்டு இருப்­ப­தாக மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரிவு அறிக்கை தெரி­வித்­துள்­ளது.