வருவாய் ஆணையத்திடம் பொய்: நிறுவன இயக்குநருக்கு சிறை

வருவாய் ஆணையத்திடம் பொய்: நிறுவன இயக்குநருக்கு சிறை

2 mins read
5cea18cc-2fe0-45e8-8e39-5be9f97afd0f
-

சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தி­டம் பொய்த் தக­வல் அளித்த குற்­றத்­திற்­காக துணை குத்­தகை நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் ஒரு­வ­ருக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு உள்­ளது.

மின்­சா­ரம் மற்­றும் உலோ­கம் தொடர்­பான வேலை­களை மேற்­கொண்டு வரும் ஹோ சின் என்­னும் துணைக் குத்­தகை நிறு­வ­னத்­தின் இயக்­கு­நரான லா யு ஹோங், 53, என்­ப­வ­ருக்கு பத்து நாள் சிறைத் தண்­ட­னை­யும் $5,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன. இவ்­வகை குற்­றத்­திற்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் முத­லா­வது நபர் இவர் என்­பது குறிப்­பி­டத்தக்­கது.

அர­சாங்க உற்­பத்­தித்­தி­றன் திட்­டம் ஒன்­றின் தொடர்­பில் மோசடி செய்ய சதித்­திட்­டம் தீட்­டி­ய­தற்­காக $38,400 தண்­டத்­தொ­கை­யும் அவ­ருக்கு விதிக்­கப்­பட்­டது. இது அவர் மோசடி செய்ய முயன்ற தொகை­யைக் காட்­டி­லும் இரு­ம­டங்கு.

முன்­ன­தாக, விசா­ர­ணை­யின்­போது சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தி­டம் பொய்­த் த­க­வல் அளித்த குற்­றத்தை அந்த சிங்­கப்­பூ­ரர் ஒப்­புக்­கொண்­டார்.

உற்­பத்­தித்­தி­றன் மற்­றும் புத்­தாக்க உத­வித் திட்­டம் மூலம் ரொக்க உதவி பெறு­வ­தற்­கான ஆணை­யத்­தின் விண்­ணப்ப பதி­வில் பொய்த் தக­வலை தந்­த­தன் மூலம் அவர் வேலை செய்து வந்த ஹோ சின் நிறு­வ­னத்­தை­யும் ஏமாற்­றி­யதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

இவ­ரது குற்­றம் இவ்­வாண்டு மார்ச் மாதம் மோச­டிக் குற்­றங்­க­ளுக்­காக 46 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட இங் சியாவ் சாய், 47, என்­ப­வ­ரு­டன் தொடர்­பு­டை­யது என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

2013 மார்ச் மாதத்­துக்­கும் 2016 ஜூலை மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலப் பகு­தி­யில் $2.7 மில்­லி­ய­னைப் பெற 83 வர்த்­த­கங்­க­ளுக்கு இங் மோசடி விண்­ணப்­பங்­களை சமர்ப்­பித்­த­தற்­காக அந்­தத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அந்த வர்த்­தக நிறு­வ­னங்­கள் அனைத்­தும் உற்­பத்­தித் திறன், புத்­தாக்க நிதி உத­விக்கு தகு­தி­பெ­றா­தவை என பின்­னர் கண்­ட­றி­யப்­பட்­டது.