உடற்குறை உள்ளோருக்கு உதவ புதிய $25 மில்லியன் திட்டம்

உடற்குறை உள்ளோருக்கு உதவ புதிய $25 மில்லியன் திட்டம்

2 mins read
8df4ace9-7983-40fd-92b4-3a4ab405216b
லெங்­கோக் பாரு­வில் 'எனே­பி­ளிங் வில்­லேஜ்' என்­னும் உடற்­குறை உள்­ளோ­ருக்­கான சமூக வெளிப் பகு­தி­யில் புதிய நட­வ­டிக்கை தொடங்­கி­வைக்­கப்­பட்ட நிகழ்­வில் சமு­தாய, குடும்ப மேம்­பா­ட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கலந்­து­கொண்­டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உடற்­குறை உள்­ளோ­ருக்கு உத­வும் செயல்­திட்­டங்­களை ஆத­ரிப்­பது, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமூ­கத்­திற்­கான பொது விழிப்­பு­ணர்­வுக்கு நிதி­ய­ளிப்­பது ஆகிய இரட்டை நோக்­கம் கொண்ட புதிய $25 மில்­லி­யன் நட­வ­டிக்கை நேற்று தொடங்கி வைக்­கப்­பட்­டது.

திறன்­மி­குந்த வாழ்­வுத் திட்­டம் (இஎல்ஐ) என்­னும் அந்த நட­வ­டிக்கை, எஸ்ஜி எனே­பிள், பந்­த­யப்­பி­டிப்­புக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் பங்­கா­ளித்­து­வத்­தில் உரு­வாகி உள்­ளது. 2024ஆம் ஆண்டு வரை இத்­திட்ட நட­வ­டிக்கை நடப்­பில் இருக்­கும். ஏற்­கெ­னவே 2015ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட டோட் போர்ட் திறன்­மி­குந்த வாழ்க்­கைத் திட்­டத்­தின் அடுத்­த­கட்­டம் இது.

புதிய நட­வ­டிக்­கை­யின்­கீழ் மானி­யம் அளிக்­கும் பொருட்டு $20 மில்­லி­யன் தொகையை வழங்க பந்­த­யப் பிடிப்­புக் கழ­கம் கடப்­பாடு கொண்­டுள்­ளது. இதி­லி­ருந்து $5 மில்­லி­யன் தொகை பொது விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைக்­குப் பயன்ப­டுத்­தப்­படும். இத்­து­டன், சமூக உண்­டி­யல் அமைப்பு வழி­ந­டத்­தும் 'கேர் அண்ட் ஷேர்' பிர­சார இயக்­கம் பொது விழிப்­பு­ணர்வு முயற்­சி­ க­ளுக்கு $1.196 மில்­லி­யன் வழங்கி இணை ஆத­ரவு அளிக்­கும்.

லெங்­கோக் பாரு­வில் 'எனே­பி­ளிங் வில்­லேஜ்' என்­னும் உடற்­குறை உள்­ளோ­ருக்­கான சமூக வெளிப் பகு­தி­யில் புதிய நட­வ­டிக்கை தொடங்­கி­வைக்­கப்­பட்ட நிகழ்­வில் சமு­தாய, குடும்ப மேம்­பா­ட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கலந்­து­கொண்­டார்.

புதிய நட­வ­டிக்கை, அக்­க­றை­யுள்ள, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமூ­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பும் சிங்­கப்­பூ­ரின் தொடர்­மு­யற்­சி­களில் மேலும் ஒரு மைல்­கல் என்று திரு மச­கோஸ் அப்போது குறிப்­பிட்­டார்.

"இந்த நட­வ­டிக்கை வடி­வம் பெற உடற்­குறை உள்­ளோ­ரைக் கவ­னிக்­கும் துறை எடுத்து வரும் முயற்­சி­க­ளோடு கூடு­தல் முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டன. ஒவ்­வொ­ரு­வ­ரும் இதில் பங்­காற்றி உள்­ள­னர்.பொது­வான நோக்­கத்­தைப் பகிர்ந்­து­கொள்­வ­தன் வழி பன்­முக சமூகப் பங்­கா­ளி­களை நாம் பெற­லாம்.

"ஒவ்­வொரு பங்­கா­ளி­யும் வெவ்­வேறு திறன்­க­ளை­யும் வளங்­க­ளை­யும் கொண்­ட­வர்­கள். வலு­வான, எல்­லோ­ரை­யும் உள்­ள­டக்­கும் தன்­மை­யைப் பேணு­வ­தற்­கான தீர்­வுக­ளைக் காண இவர்­கள் அனைவ­ரும் ஒன்­றி­ணைந்துள்­ள­னர்," என்­றார் அவர்.

புதிய இஎல்ஐ மானி­யம் பெறு­வ­தற்கு 2021 ஏப்­ரல் முதல் விண்­ணப்­பிக்­க­லாம். மூன்று அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தும் திட்­டங்­களை ஆத­ரிப்­ப­தற்­கான மானி­யம் இது. தனி­யாக வாழ்­தல், திறன்­களை கண்­டு­ணர்­தல், சமூ­கங்­களை ஒன்­றி­ணைத்­தல் ஆகிய அம்­சங்­கள் அவை. உடற்­குறை உள்­ளோ­ருக்­குப் பய­ன­ளிக்­கும் புத்­தாக்­கங்­களை உரு­வாக்­க­வும் அவர்­க­ளின் வாழ்­வுக்­குப் பொலி­வூட்­டும் தீர்­வு­க­ளைக் காண­வும் வகுக்கப்படும் செயல்­திட்­டங்­க­ளுக்கு நிதி ஆத­ரவு வழங்கு­வது இந்த மானி­யத்­தின் நோக்­கம்.

இதற்கு முன்பு இது­போன்ற 40 செயல்­திட்­டங்­க­ளுக்கு மானிய ஆத­ரவு வழங்­கப்­பட்­டது. இதன்­மூ­லம் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை $16 மில்­லி­ய­னுக்­கும் மேலான நிதி ஆத­ரவு அளிக்­கப்­பட்­டது. இந்த செயல்­திட்­டங்­க­ளால் உடற்­குறை உள்­ளோ­ரும் அவர்­க­ளைப் பரா­ம­ரிப்­போ­ரு­மாக சுமார் 8,000 பேர் பல­ன­டைந்­த­னர்.