எளியோர் உணவு பெற சுவா சூ காங்கில் வசதி

எளியோர் உணவு பெற சுவா சூ காங்கில் வசதி

1 mins read
006b2c69-b442-428c-9188-08276dc8f72e
உணவு விற்பனை இயந்திரத்தை தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங் தொடங்கி வைத்தார். படம்: தென்மேற்கு வட்டார சமூக மேம்பாட்டு மன்றம் -

சோறு, தகர டப்பாக்களில் அடைக்­கப்­பட்ட உணவு உள்­ளிட்ட வற்றை விற்கக்கூடிய இயந்­தி­ரம் ஒன்று சுவா சூ காங் வட்­டா­ரத்­தில் தேவை­யுள்ள குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­காக தொடங்கி வைக்­கப்­பட்டுள்­ளது.

இவற்றை வாங்க ஒவ்­வொரு மாதமும் 200 குடி­யி­ருப்­பா­ளர்­

க­ளுக்கு உணவு உத­வித்­தொகை வழங்­கப்­படும். உணவு விற்­பனை இயந்­தி­ரங்­களில் அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி வாங்­கிக்­கொள்ள இந்­தத் தொகையை அவர்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம். அந்த அட்­டை­யில் $50 நிரப்­பப்­பட்டு இருக்­கும். இவ்­வாறு மாதந்­தோ­றும் $10,000 பெறு­மான உத­வித்­தொகை வழங்­கப்­படும் என தென்­மேற்கு வட்­டார சமூக மேம்­பாட்டு மன்­றம் நேற்று அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

புளோக் 813ஏ, சுவா சூ காங் அவென்யூ 7ல் இம்­மா­தம் 12ஆம் தேதி தொடங்­கப்­பட்ட இயந்­தி­ரம், வச­தி­கு­றைந்த குடி­யி­ருப்­பா­ளர்­

க­ளுக்கு இல­வச உணவு பெறு­வ­தில் உள்ள சிக்­கல்­க­ளைத் தீர்க்­கும் நோக்­கம் கொண்­டது என அந்த அறிக்கை கூறி­யது.

இந்த கொவிட்-19 சிரம காலத்­தில் பல்­வேறு அமைப்­பு­களும் தனி­ந­பர்­களும் ஒன்­றி­ணைந்து மக்­க­ளுக்கு உதவ முன்­வந்­த­தா­கக் குறிப்­பிட்ட தென்­மேற்கு வட்­டார மேயர் லோ யென் லிங், "நமது சமூக மீற்­தி­றனை வலுப்­

ப­டுத்த இது­போன்று இன்­னும் பல பங்­கா­ளி­கள் முன்­வ­ரு­வார்­கள் என எதிர்­பார்க்­கி­றோம்," என்­றார்.