சிங்கப்பூரில் இன்று பிற்பகல் நிலவரப்படி புதிதாக 19 பேருக்கு கொவிட்-19 தொற்றியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வெளியில் இந்நோயைத் தொற்றியுள்ளனர்.
இந்நோயாளிகள் சோதிக்கப்பட்ட நேரத்தில் இவர்கள் வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் உள்ளனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊழியர் தங்கும் விடுதிகளிலோ சமூகத்திலோ இம்முறை புதிய கிருமித்தொற்றுகள் கண்டறியப்படவில்லை.

