ஹோட்டலிலிருந்து வெளியே அகற்றப்பட்ட விருந்தாளிகள்

ஹோட்டலிலிருந்து வெளியே அகற்றப்பட்ட விருந்தாளிகள்

1 mins read
e1399b85-fc3f-487c-9496-542fbead103d
-

மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றும் விருந்தினர்களில் 13 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டதை அடுத்து விருந்தாளிகள் தொடர்ந்து வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர். ஹோட்டலின் வாசலுக்கு முன்புள்ள சாலையில் வாகனங்கள் நிரம்பியுள்ளதையும் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் முழு பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருந்ததையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிருபர்கள் இன்று காலை 11 மணிக்கு கண்டனர்.

ஹோட்டலின் வரவேற்பு அறையிலும் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் என நம்பப்படும் பல்வேறு பேர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்த நிலையில் காணப்பட்டனர்.

வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் உள்ளவர்கள் என நம்பப்படும் சிலர், வேறு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அங்கிகள் அணிந்திருந்த பேர் இவர்களையும் இவர்களது உடமைகளையும் புதிய ஹோட்டல்களுக்குச் செல்லும் வாகனங்களுக்கு எடுத்துச்செல்ல அழைத்தனர்.

ஹோட்டலின் வாசலின் அருகே சர்டிஸ் துணை போலிசார் காணப்பட்டனர். பிற்பகல் 2.15 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிருபர்கள் மீண்டும் அங்கு சென்றபோது வாகனங்களோ அங்கிகள் அணிந்திருந்த அதிகாரிகளோ காணப்படவில்லை.

பாதிக்கப்பட்ட 13 பேர் சிங்கப்பூருக்கு வெளியே இந்நோயைத் தொற்றியதாக சுகாதார அமைச்சு முன்னதாக தெரிவித்தது. ஆனால் சிங்கப்பூருக்கு வந்த பிறகே இவர்களுக்கு இக்கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அமைச்சு சொன்னது. இந்த ஹோட்டலிலிருந்து விருந்தாளிகள் முன்கூட்டியே வெளியேறிவாறு காணப்பட்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமைக்குள் விருந்தினர்கள் அனைவரும் வேறு ஹோட்டல்களுக்கு வெளியேற்றப்படுவர் என்று மாண்டரின் ஆர்ச்சர்ட் முன்னதாக தெரிவித்தது.