மசேநி லைஃப் திட்டத்தைத் தேர்வு செய்யும் முன் கருத வேண்டிய 3 முக்கிய விவரங்கள்

மசேநி முதியோர் வாழ்நாள் வருமானத் திட்டம் ஓய்வுக் காலத்திற்கு சேமிப்பதை எளிமையாக்குகிறது. 65

வயது முதல் வாழ்நாள் முழுவதும் மாதாந்தர வழங்குதொகைகள் உங்களுக்கு வழங்கப்படும். மசேநி லைஃப் (CPF LIFE) வழங்கும் மூன்று திட்டங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை இதன்பின் வருகின்றன

1. எந்த வகையான ஓய்வுக்கால வருமானம் உங்களுக்குத் தேவை?

மசேநி லைஃப் திட்டத்திலிருந்து எவ்வித ஓய்வுக்கால வருமானம் உங்களுக்குத் தேவை என்பதை சரியாக முடிவு செய்வது முக்கியம். மூன்று மசேநி லைஃப் திட்டங்கள் உள்ளன.

மசேநி லைஃப் நிலையாய் உயரும் திட்டம்

65 வயதில் $10 கொடுத்து வாங்கும் பொருளின் விலை, 85 வயதை எட்டியவுடன் $15 ஆக உயர்ந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஓய்வுக்காலத்தில் விலைவாசி ஏற்றம் காணப் போவதை நினைத்து கவலை அடைந்தால், மசேநி லைஃப் நிலையாய் உயரும் திட்டம் (CPF LIFE Escalating Plan) உங்களுக்குப் பொருந்தும். மசேநி லைஃப் நிலையாய் உயரும் திட்டத்தின் கீழ் மாதாந்தர வழங்குதொகைகள் ஆண்டுக்கு 2 விழுக்காடாக உயரும். ஆண்டுகள்தோறும் உயரும் விலைவாசியைச் சமாளித்து வாழ்க்கைத் தரத்தை சீராக வைத்துக்கொள்ள இத்திட்டம் உதவும். 65 வயதில் பெறும் மாதாந்தர வழங்குதொகை $1000ஆக இருந்தால், 85 வயதை அடையும்போது சராசரியாக $1500 வரை எட்டுவதற்கு இந்த திட்டம் வழிவகுக்கிறது.

மசேநி லைஃப் வழக்கத் திட்டம்

விலைவாசி கூடிக்கொண்டே போனாலும் வரையறுக்கப்பட்ட வரவு செலவு பட்டியலுக்குள் செலவுகளை வைத்துக்கொள்ள நீங்கள் விரும்பலாம். உறுதியும் நிலைத்தன்மையும் உள்ள வழங்குதொகைகளை மசேநி லைஃப் வழக்கத் திட்டம் வழங்குகிறது. சமமான மசேநி லைஃப் காப்பீட்டுத் தொகையுடன் நீங்கள் வழக்கத் திட்டத்தில் சேர்ந்துகொண்டால், நிலையாய் உயரும் திட்டத்தைவிட வழங்குதொகைகள் கூடுதலாக அமையும். ஆனால் அந்த வழங்குதொகை வாழ்நாள் முழுவதும் ஒரே அளவில்தான் இருக்கும். நாளடைவில் அந்த வழங்குதொகை நிலையாய் உயரும் திட்டத்தைவிட குறைவாகவும் இருக்கும்.

மசேநி லைஃப் அடிப்படைத் திட்டம்

நாளடைவில் படிப்படியாகக் குறைந்துவரும் மாதாந்தர வழங்குதொகையுடன் தொடங்குவதற்கு நீங்கள் தயாராக இருந்தால், மசேநி அடிப்படைத் திட்டம் உங்களுக்குப் பொருந்தும். மசேநி லைஃப் 2009ஆம் ஆண்டில் தொடங்கியபோது முதல் மரபுரிமைத் திட்டமாக இந்த அடிப்படைத் திட்டம் அறிமுகமானது. நிலையான கூடுதலான மாதாந்தர வழங்குதொகைகளைத் தரும் வழக்கத் திட்டம் போல இல்லாமல், அடிப்படைத் திட்டம் குறைவான வழங்குதொகைகளை வழங்கும். உங்களது ஒன்றிணைந்த மசேநி சேமிப்புகள் $60,000க்கும் கீழ் குறையும்போது, அடிப்படைத் திட்டத்தின் மாதாந்தர வழங்குதொகைகளும் படிப்படியாக குறையும். உங்கள் முதல் $60,000யின் மூலம் வரும் கூடுதல் வட்டித்தொகை ஓய்வுக்காலக் கணக்கில் சேர்க்கப்பட்டு, மாதாந்தர வழங்குதொகைகளாக வழங்கப்படுவதே இதற்கு காரணம். வழங்குதொகைகள் கொடுக்கும்போது மசேநி சேமிப்புகளும் காலம் செல்ல குறையும். இதனால் நீங்கள் பெறும் கூடுதல் வட்டியும் மாதாந்தர வழங்குதொகைகளும் குறைந்துகொண்டே போவது இயல்பாகும்.

மூன்று மசேநி லைஃப் திட்டங்களும் வாழ்நாள் முழுவதும் வழங்குதொகைகளை அனுபவிக்க வழிவகுக்கும். மீதம் இருக்கக்கூடிய மசேநி சேமிப்புகளும் அனைத்து மசேநி லைஃப் காப்பீடு இருப்புகளும் உங்கள் மறைவுக்குப் பிறகு நீங்கள் நியமனம் செய்பவர்களுக்கு வழங்கப்படும்.

2. உங்களுக்கு எவ்வளவு தேவை?

உங்களுக்கு உகந்த மசேநி லைஃப் திட்டத்தைத் தேர்வு செய்த பிறகு, அடுத்தபடியாக நீங்கள் பெற விரும்பும் மாதாந்தர வழங்குதொகையின் அளவைக் கணக்கிடவேண்டும். ஓய்வுக்காலத்தில் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறையையும் அதைச் சார்ந்த செலவுகளையும் பற்றி சிந்திக்க வேண்டும்.

மசேநி லைஃப் திட்டம் மூலம் அடைய விரும்பும் மாதாந்தர வழங்குதொகைகளைப் பெறுவதற்கு மசேநி கணக்கில் இருக்கவேண்டிய சேமிப்பு அளவு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, மசேநி லைஃப் கணிப்பானைப் (CPF LIFE Estimator) பயன்படுத்தலாம்.

மசேநி லைஃப் கணிப்பானுக்கு பின்வரும் இணைப்பை நாடலாம்:

https://www.cpf.gov.sg/eSvc/Web/Schemes/LifeEstimator/LifeEstimator

3. ஓய்வுக்கால இலக்கை எப்படி அடைவது?

55 வயதுக்கு கீழ் இருந்தால், ரொக்கமாகவோ மசேநி சேமிப்பையோ பயன்படுத்தி மசேநி சிறப்புக் கணக்கில் (CPF Special Account) பணம் நிரப்பலாம். நீங்கள் 55 வயதுக்கு மேல் இருந்தால்*, ஓய்வுக்காலக் கணக்கில் பணம் நிரப்பலாம். சிறிய அளவில் வழக்கமாக பணம் நிரப்பும் பழக்கம் காலப்போக்கில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஒரு நாளுக்கு $5 மட்டுமே மசேநி சேமிப்பில் சேர்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டால், 15 ஆண்டுகளில் கூட்டு வட்டியின் சக்தியால் $35,000க்கும் மேலான நிகர தொகை அளவை ஈட்டலாம்.

உடனடி தேவைகள் இல்லை என்றால், மசேநி லைஃப் மாதாந்தர வழங்குதொகைகள் பெறுவதைத் தள்ளி வைத்துக்கொள்ளலாம். தள்ளிவைக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் மாதாந்தர வழங்குதொகையின் அளவு 7 விழுக்காடு வரை அதிகரிக்கும். வழங்குதொகை பெறுவதைத் தொடங்குவதற்கு 70 வயது வரை உங்களுக்கு வரம்பு உள்ளது. அதன்பிறகு தானியங்கி முறையில் தொடங்கப்படும்.

* நீங்கள் 55 வயதை அடையும்போது, சிறப்புக் கணக்கு மற்றும்/அல்லது சாதாரண கணக்கில் உள்ள சேமிப்புகள், முழுத் தொகை வரை, ஓய்வுக்காலக் கணக்கிற்கு இடமாற்றப்படும்.

** சிறப்பு அல்லது ஓய்வுக்காலக் கணக்கிற்கு உரிய 4% வருடாந்தர அடிப்படை வட்டியை வைத்து கணக்கிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!