உணவகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட எழுவர் கைது; மேலும் மூவரைத் தேடும் போலிசார்

உணவகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட எழுவர் கைது; மேலும் மூவரைத் தேடும் போலிசார்

1 mins read
03045781-a22b-4b5b-973b-8b2cee1b6333
-
Google News Preferred Icon

சர்க்குலர் ரோட்டில் இருக்கும் உணவகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) கைகலப்பில் ஈடுபட்ட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 20 முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள்.

இரு குழுக்களுக்கிடையேயான இந்த சண்டை பற்றி அன்று இரவு 9.45 மணிக்கு தகவல் கிடைத்ததால போலிசார் தெரிவித்தனர்.

எண் 26 சர்க்குலர் ரோட்டில் இருக்கும் தி மாஸ்க் ரெஸ்டரன்ட் அண்ட் பாரில் நிகழ்ந்த கைகலப்பு சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலிசார் 24, 42 வயதுகளில் இருந்த இருவரை கைது செய்தனர். கண்மூடித் தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இவ்விருவர் மீதும் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் போலிசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் 2 மணி நேரத்துக்குள்ளாக 20 முதல் 27 வயதுக்குட்பட்ட வேறு ஐவரும் கைது செய்யப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாக இவர்கள் ஐவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தின் தொடர்பிலான விசாரணைக்கு மூவரை போலிசார் தேடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்