செந்தோசாவில் உள்ள இரு ஹோட்டல்கள் அறைப் பதிவுகளை ஏற்க ஒரு மாதத் தடை

செந்தோசாவில் உள்ள இரு ஹோட்டல்கள் அறைப் பதிவுகளை ஏற்க ஒரு மாதத் தடை

1 mins read
61624323-6412-48af-9a02-c220cc0584f9
'பீச் வில்லாஸ்', 'இக்குவேரியஸ் ஹோட்டல்' எனும் அந்த இரு ஹோட்டல்களுக்கான தடை நேற்று முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை நீடிக்கும். படம்: BEACH VILLAS/FACEBOOK, SCREENGRAB FROM GOOGLE MAPS -

'ரிசோட்ஸ் வோல்ர்டு செந்தோசா'வில் உள்ள இரண்டு ஹோட்டல்கள் அறைப் பதிவுகளை ஏற்றுக்கொள்ள ஒரு மாதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை பாதுகாப்பு தூர இடைவெளி நடைமுறைகளைக் கடைப்பிடிக்க தவறியதே அதற்குக் காரணம் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.

'பீச் வில்லாஸ்', 'இக்குவேரியஸ் ஹோட்டல்' எனும் அந்த இரு ஹோட்டல்களுக்கான தடை நேற்று முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை நீடிக்கும். தற்போதுள்ள அதன் அறைப் பதிவுகளை அவை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

நேற்று முன்தினம் வரை பத்து ஹோட்டல்களும் தங்கும் விடுதிகளும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறி யுள்ளன. நுழைவுப் பதிவை நடத்தாமல் இருந்தது, விருந்தி னர்களின் விவரங்களைப் பதிவு செய்யாமல் இருந்தது போன்றவை அந்த விதிமீறல்கள்.

'பீச் வில்லாஸ்' வளாகத்தில் குறைந்தது 15 பேர் கூடியதைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த 15 பேரில் நால்வர் மட்டுமே ஹோட்டலில் விருந்தினர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

மற்றொரு சம்பவத்தில், நவம்பர் 17ஆம் தேதியன்று தனது ஓர் அறையில் 16 பேர் கூடியதை 'இக்குவேரியஸ் ஹோட்டல்' தடுக்கத் தவறியதைக் கழகத்தின் அதிகாரிகள் கண்டுபிடித் தனர். அந்த அறைக்கு மூவர் பதிவு செய்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்