தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு $237 மி. ஒப்பந்தம்

தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு $237 மி. ஒப்பந்தம்

1 mins read
b8897eb9-bcd4-432c-9149-12e613bb39d9
ஓவியரின் பார்வையில் துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலை (வலது). படம்: தேசிய சுற்றுப்புற வாரியம் -

பெரிய அள­வி­லான தொழிற்­சாலை கழி­வு­நீ­ரைச் சுத்­தி­க­ரிப்­ப­தற்­காக துவாஸ் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­யில் 'இன்­டஸ்ட்­ரி­யல் லிக்­விட் மோடி­யுல்ஸ்' எனும் உள்­கட்­ட­மைப்பு வசதி­க­ளைக் கட்ட 'சைனா ஸ்டேட் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் எஞ்­சி­னி­ய­ரிங்' (சிஎஸ்­சிஇ) நிறு­வ­னத்­திற்கு $237 மில்­லி­யன் மதிப்­பி­லான ஒப்­பந்­தம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது கட்­டப்­பட்டு வரும் துவாஸ் ஆலைக்­காக பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் வழங்­கி­யுள்ள ஆறா­வது பெரிய அள­வி­லான கட்­டு­மான ஒப்­பந்­தம் இது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்­சாலை கழி­வு­நீ­ரைச் சுத்­தி­க­ரிப்­ப­தற்­கான உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை சிஎஸ்­சிஇ கட்­டும் என்று கழ­கம் நேற்று கூறி­யது.

"பொதுப் பய­னீட்­டுக் கழ­கம், தொழிற்­சாலை கழி­வு­நீரை மறு­பயன்­பாட்­டிற்­காக சுத்­தி­க­ரிப்­பது இதுவே முதன்­முறை. தண்­ணீ­ரைச் சுத்­தி­க­ரிக்­கும் ஆற்­றலை மேம்­ப­டுத்­து­வ­தில் இது முக்­கிய படி," என்று கழ­கம் சொன்­னது.

துவாஸ் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை, தொழிற்­சாலை மற்­றும் வீடு­க­ளின் கழி­வு­நீர் இரண்­டை­யும் பெற்று அதைச் சுத்­தி­க­ரிக்­கும்.

சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட நீர், கூடு­தல் சுத்­தி­க­ரிப்பு செயல்­மு­றை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு மறு­ப­யன்­பாட்­டிற்­காக தொழிற்­சா­லை­க­ளுக்­குத் திருப்பி அனுப்­பப்­படும்.

மேற்­கூ­றப்­பட்ட இந்த உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள், நாள் ஒன்­றுக்கு 150,000 கன மீட்­டர் வரை­யி­லான தொழிற்­சாலை கழி­வு­நீ­ரைச் சுத்­தி­க­ரிக்­கும் ஆற்­றல் உடை­யவை. இது 60 ஒலிம்­பிக் நீச்­சல் குளங்­களில் நிரம்­பிய நீரின் அள­வுக்­குச் சமம்.

இந்த 'இன்­டஸ்ட்­ரி­யல் லிக்­விட் மோடி­யுல்ஸ்' வச­தி­க­ளுக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் இம்­மா­தம் 30ஆம் தேதி தொடங்­கும். 2025ஆம் ஆண்டு டிசம்­ப­ருக்­குள் இந்த வசதி­கள் கட்­டங்­கட்­ட­மாக பயன்­ப­டுத்­தப்­படும்.