புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தின் செஞ்சா சாலை, செங்ஹுவா பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள வாடகை வீடுகளில் அல்லது ஓரறை, ஈரறை 'ஸ்டூடியோ' வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்காக உணவு வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இருக்கும் சமைக்கப்பட்ட அல்லது உலர்ந்த உணவைப் பெற்றுக்கொள்ள தகுதிபெறும் குடியிருப்பாளர்களுக்கு $50 உதவித் தொகை அடங்கிய அட்டை வழங்கப்படும். அந்தத் தொகை அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். லாப நோக்கமற்ற அமைப்பான 'தி ஃபுட் பேங் சிங்கப்பூர்' இதனை வழங்குகிறது.
செஞ்சா சாலையில் அமைந்துள்ள மூன்று உணவு இயந்திரங்களில் அந்த அட்டையைப் பயன்படுத்தி உணவைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்குத் தகுதிபெறும் குடும்பங்களுக்கு இதுவரை 500க்கும் அதிகமான கடிதங்களை செங்ஹுவா தொகுதி அலுவலகம் அனுப்பியுள்ளது.
இந்த முன்னோடித் திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும். அதன் பிறகு இத்திட்டம் மறுஆய்வு செய்யப்படும்.

