கைகளில் தொடர்ச்சியாக வலி, வலுவின்மை இருந்தபோதுதிலும் அதிகம் சிரமமான துப்புரவு துறையில் ரவி ராஜசேகரன் சாதாரண துப்புரவாளராக தொடங்கி பலரை மேற்பார்வை பார்க்கும் நிலைக்கு உயர்ந்தார்.
அவரது கடின உழைப்பு, மீள்திறன் தன்மை, கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஆகியவற்றுக்காக இவருக்கு தேசிய சுற்றுப்புற முகவை நட்சத்திர விருதை வழங்கி கௌரவித்தது.
இவரையும் சேர்த்து மொத்தம் 27 பேருக்கு நட்சத்திர விருது வழங்கப்பட்டது.
"என்னுடைய கடந்தகால வாழ்க்கையில் என்னால் இதனை நினைத்துபார்த்திருக்கக்கூட முடியாது.
"இந்தத் துறையில் நான் நிறைய சாதித்துள்ளேன். என்னை மேம்படுத்திக் கொள்ளும் ஆர்வத்தில் முடிவே இருக்காது," என்று திரு ரவி ராஜசேகரன் தெரிவித்தார்.

