நவம்பரில் உற்பத்தித்துறை 17.9% வளர்ச்சி கண்டது

நவம்பரில் உற்பத்தித்துறை 17.9% வளர்ச்சி கண்டது

2 mins read

சிங்­கப்­பூ­ரின் உற்­பத்­தித் துறை நவம்­ப­ரில் மீண்­டெ­ழுந்­தது. முந்தைய மாதத்­தில் அந்­தத் துறை சந்­தித்த சரிவு, நவம்­ப­ரில் வளர்ச்சி­யாக மாறி இருக்­கிறது.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில் நவம்­பர் மாத உற்­பத்தி 17.9 விழுக்­காடு கூடி இருக்­கிறது. இந்­தத் துறை அக்­டோ­ப­ரில் 0.8 விழுக்­காடு குறைந்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட புள்­ளி­வி­வரங்­கள் மூலம் இவை தெரி­ய­வ­ரு­கின்­றன.

உயி­ரி­யல் மருத்­துவ உற்­பத்­தித் துறையை நீக்­கி­விட்­டுப் பார்க்­கை­யில், உற்­பத்­தித் துறை சென்ற மாதம் 14 விழுக்­காடு கூடி இருக்­கிறது. மாத அடிப்­ப­டை­யிலான சரி­யாக்­கங்­களை அடுத்து நவம்­ப­ரில் வளர்ச்சி 7.2 விழுக்­கா­டாக இருக்­கிறது.

உயி­ரி­யல் மருத்­துவ உற்­பத்­தித் துறையை நீக்­கி­விட்­டுப் பார்க்­கை­யில் வளர்ச்சி, அக்­டோ­ப­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில், சென்ற மாதம் 6 விழுக்­கா­டாக இருந்­தது.

உயி­ரி­யல் மருத்­துவ உற்­பத்தி சென்ற ஆண்டு நவம்­ப­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்­டு 40.6 விழுக்­காடு விரி­வ­டைந்து இருக்­கிறது. மருந்து தயா­ரிப்­புத் துறை 50.8 விழுக்­காடு வளர்ந்­தது.

மருத்­துவ தொழில்­நுட்­பத் துறை­யும் 22.7 விழுக்­காடு விரி­வ­டைந்­தது. முக்­கி­ய­மான மின்­ன­ணுத் துறை ஆண்­டுக்­காண்டு அடிப்­படை­யில் நவம்­ப­ரில் 34.9 விழுக்­காடு விரி­வ­டைந்­தது.

இந்­தத் துறை­யின் எல்லா பிரிவு­க­ளி­லுமே வளர்ச்சி இருந்­தது. என்­றா­லும் தக­வல்தொடர்பு மற்றும் பய­னீட்­டா­ளர் மின்­னி­யல் துறை இதற்கு விதி­வி­லக்கு.

குறிப்­பாக கணி­னிச் சில்லு தொழில்­துறை 40.9 விழுக்­காடு வளர்ச்சி கண்­டுள்­ளது. மின்­ன­ணுக் குழு­மத்­தின் உற்­பத்தி ஜன­வரி முதல் நவம்­பர் வரை ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 9.3 விழுக்­காடு வளர்ச்சி கண்டு இருக்­கிறது.

துல்­லி­ய பொறி­யி­யல் குழு­மம், சென்ற ஆண்டு நவம்­ப­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் சென்ற மாதம் 7.3 விழுக்­காடு கூடி­யது. ரசா­ய­னத் துறைக் குழு­மம் சென்ற மாதம் 10.1 விழுக்­காடு விரிவு கண்­டது.

மொத்­தத்­தில், இந்­தக் குழு­மம் 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்­டில் இது­வ­ரை­ 2.2 விழுக்­காடு குறைந்துள்ளது.

மாறாக, பொது உற்­பத்தி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 13.3 விழுக்­காடு குறைந்­தது.

இந்­தப் பிரிவு ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் இந்த ஆண்­டின் ஜன­வரி முதல் நவம்­பர் வரை 12.7 விழுக்­காடு குறைந்­துள்­ளது.

போக்­கு­வ­ரத்துப் பொறி­யி­யல் துறை­யும் நவம்­ப­ரில் 29.5 விழுக்­காடு சுருங்­கி­யதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

உயி­ரி­யல் மருத்­துவ உற்­பத்தி 40.6% கூடியது; மருந்து தயா­ரிப்­புத் துறை 50.8% வளர்ச்சி