உயர்நிலை மாணவர்களுக்கு உதவும் புதிய வர்த்தகச் செயலி

உயர்நிலை மாணவர்களுக்கு உதவும் புதிய வர்த்தகச் செயலி

1 mins read

தொழில்­மு­னைப்­புக் கல்வி செயல்­திட்­டத்­தில் சேர்ந்து படிக்­கும் உயர்­நி­லைப்பள்ளி மாண­வர்­களுக்கு ஒரு புதிய இணை­யத்­தள செயலி உதவும்.

'யுபி­எஸ்' என்ற சுவிட்­சர்­லாந்தை சேர்ந்த முத­லீட்டு வங்­கி­யின் தொண்­டூ­ழி­யர்­கள் அந்­தச் செய­லியை உரு­வாக்கியிருக்­கி­றார்­கள். அது வரு­வாய், செல­வினம் போன்ற வர்த்­தகக் கோட்­பா­டு­களை மாண­வர்­கள் சமா­ளிக்க உறுதுணையாக இருக்கும்.

உயர்­நிலை 3 வழக்­க­நிலை (ஏட்­டுக்­கல்வி), வழக்­க­நிலை (தொழிற்­கல்வி) மாணவர்கள் 'ஹாலோ­ஜென் ஃபவுண்­டே­ஷன்' என்ற நிறு­வ­னத்­தின் தொழில்­முனைப்புக் கல்விச் செயல்­திட்டக் கட்­ட­மைப்­பைச் சேர்ந்­த­வர்­கள்.

இந்­தச் செயல்திட்­டம் வர்த்­தக அடிப்­படை அம்­சங்­களைப் போதிக்­கிறது. தொழில்­மு­னைப்பு பயிற்சி பெறும் இளையர்­க­ளுக்குப் புதிய செயலி பெரி­தும் உத­வும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

வர்த்­தக நிறு­வ­னங்­களின் நிதி செயல்­தி­றனைப் பொறுத்தவரை­ செல­வி­னங்­களும் வரு­வா­யும் முக்­கி­ய­மா­னவை என்­பதை மாண­வர்­கள் புரிந்­து­கொள்ள புதிய செயலி உத­வும்.

யுபி­எஸ் சிங்­கப்­பூர் வங்­கி­யும் ஹாலோ­ஜென் ஃபவுண்­டே­ஷன் அமைப்­பும் நான்கு ஆண்­டு­க­ளாக ஒத்­து­ழைத்து வரு­கின்­றன.