கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகம்

கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகம்

2 mins read

தென் தீவுகள், உபின் தீவுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்­கப்­பூர் தென் தீவு­கள், உபின் தீவு ஆகி­ய­வற்­றுக்கு அண்­மை­யில் வரு­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தைத் தொடர்ந்து, மரினா சவுத் பியர், சாங்கி பாயிண்ட் படகு முனை­யங்­களில் கூடு­த­ல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தாக கடல்­துறை, துறை­முக ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

பாது­காப்பு இடை­வெளி கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­யும் தூதர்­க­ளைப் பணி­ய­மர்த்­து­வது, படகு முனை­யம் போன்ற கூட்­ட­மான பகு­தி­களில் மக்­கள் வரி­சை­யில் நிற்­ப­தற்கு வசதி ஏற்­ப­டுத்­தித் தரு­வது உள்­ளிட்­டவை இந்­தப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் அடங்­கும். கொவிட்-19 சூழல் கார­ண­மாக அனைத்­து­ல­கப் பய­ணங்­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து வார­யி­று­தி­களில் சிங்­கப்­பூ­ரின் தென் தீவு­க­ளுக்கு அதி­க­மா­னோர் படை­யெ­டுக்­கின்­ற­னர். இத்­த­கைய சூழ­லில் கூட்ட நெரி­ச­லைக் கட்­டுப்­ப­டுத்த மேற்­கூ­றப்­பட்ட இந்த ஏற்­பா­டு­கள் உத­வும்.

கட­லில் பொழு­து­போக்கு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோரை கவ­ன­மாக இருக்­கும்­படி ஆணை­யம் நினை­வூட்­டி­யது. வேக­மாக எழும் கடல் அலை, நீருக்­கு அடியில் ஏற்­படும் ஆபத்­து­கள் போன்­ற­வற்­றுக்கு எதி­ராக மக்­கள் விழிப்­பு­டன் இருக்­கு­மாறு அது கேட்­டுக்­கொண்­டது.

உயிர் காப்­பா­ளர்­கள் பணி­யில் இருக்­கும் பகு­தி­கள், நீந்­து­வ­தற்­காக வரை­ய­றுக்­கப்­பட்ட பகு­தி­களில் மட்­டுமே மக்­கள் நீச்­சல் அடிக்க வேண்­டும் என்­றும் ஆணை­யம் அறி­வு­றுத்­தி­யது.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது பரு­வ­மழை நீடிக்­கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாத தொடக்­கத்­தில் அது முடி­வு­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"பரு­வ­ம­ழை­யால் இம்­மா­தம் முதல் அடுத்த மாத ஆரம்­பப் பகுதி வரை பல இடங்­க­ளி­லும் தொடர் மழை நீடிக்க வாய்ப்­புள்­ளது. காற்­றும் பல­மாக வீசும் என்­ப­தால் கடல் சீற்­றத்­து­டன் காணப்­படும்," என்று ஆணை­யம் விவ­ரித்­தது.

இதற்­கி­டையே, பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு எதி­ராக விழிப்­பு­டன் இருக்­கும்­படி துறை­முகப் பகுதி மற்­றும் படகு உரி­மை­யா­ளர்­கள், நடத்­து­நர்­க­ளுக்கு அறி­வுரை வழங்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு நடை­மு­றை­கள் குறித்து கப்­பல் சிப்­பந்­தி­கள் தங்­க­ளைப் பரிட்­ச­யப்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் முயற்­சி­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.