சிறிய அளவில் கொண்டாட்டம்; கிறிஸ்மஸ் நாளில் தாய்க்கு ஓய்வு தந்த பிள்ளைகள்

சிறிய அளவில் கொண்டாட்டம்; கிறிஸ்மஸ் நாளில் தாய்க்கு ஓய்வு தந்த பிள்ளைகள்

1 mins read
99bce464-3200-4e46-b3fc-29097b79a0e1
(இடமிருந்து) மகள் அரில்லா, தாயார் வெள்ளைத்தாய், மனைவி பிரியதர்ஷினி செல்வராஜ் ஆகியோருடன் திரு ஜான் ராஜ் பாலகிருஷ்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கி.ஜனார்த்­த­னன்

ஆண்­டு­தோ­றும் கிறிஸ்­மஸ் நாளன்று கிட்­டத்­தட்ட நூறு விருந்­தி­னர்­க­ளுக்­குச் சமைத்­துப் பரி­மாறு­வது 70 வய­தான திரு­வாட்டி வெள்­ளைத்­தா­யின் வழக்­கம்.

ஆனால், கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லில் இம்முறை கிறிஸ்­மஸ் கொண்­டா­டப்­படும் நிலை­யில், இவரது பிள்­ளை­கள் மூவ­ரும் உணவு ஏற்­பாட்­டைப் பார்த்துக்­கொண்டு, தங்­கள் தாய்க்கு ஓய்வு அளித்துள்ளனர்.

"என் மூத்த மகன் ஜானின் குடும்­பத்­தி­ன­ருடன் நான் தங்­கி­ உள்­ளேன். நண்­ப­கல் உண­விற்­காக என் மக­ளின் குடும்­பத்­தி­னரும் இர­வில் இளைய மகனின் குடும்­பத்­தி­ன­ரும் வீட்­டிற்கு வரு­வார்கள்," என்­றார் திரு­வாட்டி வெள்­ளைத்­தாய்.

"கொரோனா நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புக் கால­கட்­டத்­தில் தேவா­ல­யத்­திற்­குச் செல்ல முடி­யா­மல் போன­தால் தொடக்­கத்­தில் எனக்கு வருத்­த­மாக இருந்­தது. இருந்­த­போ­தும், இணை­யம் வழி­யாக தேவா­லய போத­னை­க­ளைக் கேட்­டுக்­கொண்­டேன்," என்ற திரு­வாட்டி வெள்­ளைத்­தாய்க்கு மூன்று பேரக்­கு­ழந்­தை­கள் உள்­ள­னர்.

சிங்­கப்­பூர் சிறார் சங்­கத்­தில் பணி­யாற்­றும் திரு­வாட்டி வெள்­ளைத்­தா­யின் மரு­ம­கள் பிரி­ய­தர்ஷினி செல்­வ­ராஜ், 39, முன்­களப் பணி­யா­ள­ரா­க இருப்பதால் அவர் வேலைக்­குச் சென்­றாக வேண்­டிய கட்­டா­யம். இத­னால் தொடக்­கத்­தில் சிர­மத்­தை­யும் மன­உ­ளைச்­ச­லை­யும் உணர்ந்த திரு­மதி பிரியா, கிறிஸ்­மஸ் நாள் தமக்கு ஓய்­வை­யும் தம் நான்கு வயது மகள் அரில்­லா­வுக்­குக் குதூ­க­லத்­தை­யும் தந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

புனித வெள்ளி, ஈஸ்­டர் போன்­ற­வற்­றைத் தனிமையில் கொண்­டா­டிய நிலை­யில், கிறிஸ்மஸ் நாளி­லா­வது தங்­க­ளால் விருந்­தி­னர்­களை வர­வேற்க முடி­வதை நினைத்து தமது குடும்­பம் நன்­றி­யு­ணர்­வு­டன் இருப்­ப­தா­கக் கூறி­னார் திரு­வாட்டி வெள்­ளைத்­தா­யின் மூத்த மகன் ஜான் ராஜ் பால­கி­ருஷ்­ணன், 43.