பண்டிகை காலத்தில் அன்பை பகிரும் சமூக முயற்சி

பண்டிகை காலத்தில் அன்பை பகிரும் சமூக முயற்சி

2 mins read
09731a6b-a69b-4795-bba3-7d2a0a67a593
கிறிஸ்மஸ் தாத்தா போன்று உடை அணிந்த தொண்டூழியர் ஒருவர் சிறுவர்களுடன் பண்டிகை கொண்டாட்ட உணர்வை பகிர்ந்துகொண்டார். படம்: சன்லவ் இல்லம் -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த கிறிஸ்­மஸ் சம­யத்தில் எங்­கே­யும் செல்ல முடி­யா­மல் சில குடும்­பங்­கள் இருக்­க­லாம்.

குறிப்­பாக, சிறு­வர்­கள் இது­போன்ற கொண்­டாட்­டங்­க­ளை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருப்­பர்.

இவர்­க­ளின் முகத்­தில் மகிழ்ச்சியைக் கொண்டுவர சத்திய சாய் அனைத்­து­லக அமைப்­பும் (சிங்­கப்­பூர்) சன்­லவ் இல்­ல­மும் சேர்ந்து ஒரு நன்­கொடை அன்­பளிப்பு விநி­யோக முயற்­சி­யில் ஈடு­பட்­டன.

தீவு முழுவதும் சிறு­வர்­கள் இருக்­கும் 100 வசதி குறைந்த குடும்­பங்­களை அடை­யா­ளம் கண்டு, நேர­டி­யாக கிறிஸ்­­மஸ் தாத்­தா­வையே அங்கு அனுப்பி அன்­ப­ளிப்புப் பைகளை இவை வழங்­கின.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்று கட்­டுப்­பா­டு­க­ளால், வெளியே செல்ல இய­லாத சில குடும்­பங்­களுக்கு கிறிஸ்­­மஸ் கொண்­டாட்ட உணர்வைப் பகிர்ந்­து­கொள்­ளும் நோக்­கத்துடன் இம்­மு­யற்­சி­யில் இறங்கி­னோம்," என்று தெரி­வித்­தார் சன்­லவ் இல்­லத்­தின் தலை­மைத் திட்ட அதி­காரி திரு க.ராஜ­மோ­கன்.

டெப்போ சாலை­யில் அமைந்­து உள்ள ஸ்ரீ ருத்­ர­கா­ளி­யம்­மன் ஆலய வளா­கத்­தில் இம்மாதம் 19, 20ஆம் தேதி­களில் தொண்­டூ­ழி­யர்­கள் அன்­ப­ளிப்புப் பைகளை நிரப்ப உதவி­னர்.

ஒவ்­வொரு பையி­லும் $50 மதிப்புள்ள பேரங்­காடிப் பற்­றுச்­சீட்டு, பிஸ்­கெட், 'நட்­டேலா' சாக்­லெட், ரொட்டி, 'நூடல்ஸ்', 'மைலோ', பள்­ளிக்குத் தேவை­யான எழுதுப் பொருட்கள் என தலா $120 மதிப்­புள்ள பொருட்­கள் அடங்­கி­ இருந்­தன.

கடந்த டிசம்­பர் 19ஆம் தேதி­யிலி­ருந்து தொடர்ந்து மூன்று நாட்­களாக இயோ சூ காங், அட்­மிரல்ட்டி, உட்­லண்ட்ஸ், பொங்­கோல், ஹவ்­காங் போன்ற வெவ்­வேறு இடங்­க­ளுக்கு வாக­னங்களில் சென்று குடும்­பங்­க­ளுக்கு வாழ்த்துக் கூறி, அன்­ப­ளிப்புப் பைகளை வழங்­கி­னர் இவ்­விரு அமைப்­பு­க­ளின் தொண்­டூ­ழி­யர்­கள்.

இந்த முயற்­சி­யில் ஈடு­பட்ட 40க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­களில் ஒரு­வ­ரான 63 வயது திரு சு.ராஜ­சே­க­ரன், பிறரை மகிழ்­விப்­பதில் ஒரு­வித ஆனந்­தம் கிடைக்­கிறது என்­றும் இது­போன்ற முயற்­சி­கள் தொடர்ந்து வெவ்­வேறு அமைப்­பு­களால் மேற்­கொள்­ளப்­ப­டு­வது ஆத­ரிக்­கப்­பட வேண்­டும் என்­றும் கூறி­னார்.

"இந்த கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம­யத்­தில் பாதிப்­ப­டைந்த குடும்­பங்­க­ளுக்­குப் பக்­க­ப­ல­மாக இருக்­கி­றோம் என்­பதை அவர்­களுக்கு உணர்த்­து­வது முக்­கி­யம். கிறிஸ்­மஸ் சம­யத்­தில் அன்பை வெளிப்­ப­டுத்­தும் முயற்­சி­யாக இது விளங்­குகிறது," என்­றார் திரு ராஜ­சே­க­ரன்.