சிங்கப்பூரில் 10 புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

1 mins read
47a76011-0182-4ceb-a1fe-174d53f2fea8
-

சனிக்கிழமை மதிய நிலவரப்படி புதிதாக 10 கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அந்தப் பத்துப் பேருக்கு இக்கிருமித்தொற்று வெளிநாட்டில் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரை வந்தடைந்ததுடன் இவர்கள் அனைவருக்கும் வீட்டில் தங்கும் உத்தரவு கொடுக்கப்பட்டதாக அமைச்சு கூறியது. சமூகத்திலோ வெளிநாட்டு ஊழியர் தங்கும் இடத்திலோ எந்தப் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களுமே பதிவாகவில்லை.

சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவர் மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப்பூரில் தமது வீட்டில் தங்கும் உத்தரவை முடித்துவிட்ட பிறகு அவருக்கு கொவிட்-19 இருப்பது வெள்ளிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக தங்களது வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றிய 13 நோயாளிகளுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்த 47 வயது நிரந்தரவாசி, சுகாதார அமைச்சு அறிவித்த புதிய 14 கொவிட்-19 நோயாளிகளில் ஒருவர். இவர்கள் அனைவருமே சிங்கப்பூருக்கு வெளியில் கொரோனா கிருமியைத் தொற்றினர்.