கடையநல்லூர் ஜமீலாவிற்கு தமிழவேள் விருது

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஆண்­டு­தோ­றும் தமிழ் மொழி விழா­வில் நடத்­தும் முத்­த­மிழ் விழா, இந்த ஆண்டு 25ஆம் ஆண்டு வெள்ளி விழா­வாக, இம்மாதம் 19ஆம் தேதி சனிக்­கி­ழமை மாலை 6.00 மணிக்கு இணைய வெளி­யில் சிறப்­பாக நடை­பெற்­றது. ‘ஸூம்’ செயலி மற்­றும் ‘யூடியூப்’ நேரலை வழி நடை­பெற்ற நிகழ்­வில் ஏறத்­தாழ 1,200 பேர் பார்­வை­யா­ளர்­க­ளா­கக் கலந்துகொண்­ட­னர் .

ஆண்­டு­தோ­றும் உள்­ளூர்த் தமிழ் எழுத்­தா­ளர் ஒரு­வ­ருக்கு வழங்­கும் தமி­ழ­வேள் விருது இந்த ஆண்டு மூத்த எழுத்­தா­ளர் கடை­ய­நல்­லூர் ஜமீலாவுக்கு வழங்­கப்­பட்­டது. கவிதை, சிறு­கதை, கட்­டுரை என 10 நூல்­கள் எழு­தி­யுள்ள திரு. N. M. சம்­சு­தீன் என்ற கடை­ய­நல்­லூர் ஜமீலா அவர்­கள் தொடர்ந்து தனது படைப்­பு­களை எழுதி வரு­கி­றார்.

நிகழ்­வில் மாறு­வே­டப்­போட்டி, பேச்­சுப்­ போட்டி மற்­றும் கதை சொல்­லும் போட்­டி­யில் வெற்றி பெற்ற பாலர் மற்­றும் தொடக்­கப் பள்ளி மாண­வர்­க­ளின் படைப்­புக்­கள் இடம் பெற்­றன. முத்­த­மிழ் விழா­வை­யொட்டி நடை­பெற்ற பாலர் பள்ளி முதல் பல்­க­லைக்கழ­கம் வரை­யி­லான மாண­வர்­கள் மற்­றும் பொது­மக்­க­ளுக்­கான போட்­டி­க­ளின் வெற்­றி­யா­ளர்­கள் நிகழ்­வில் அறி­விக்­கப்­பட்­டார்­கள் .

நிகழ்­விற்கு தலை­மை­யேற்ற சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் சுப அரு­ணா­ச­லம், எழுத்­தா­ளர் கழ­கம் நோய்ப் பர­வல் காலத்­தி­லும் தொடர்ந்து தடைப்­ப­டா­மல் இலக்­கி­யப் பணி ஆற்­றி­யதை குறிப்­பிட்­ட­தோடு, இதுபோன்ற இடர் நிறைந்த காலங்­களில் இலக்­கிய ஆர்­வம் அனை­வ­ருக்­கும் துணை நின்று உற்­சா­கம் அளிக்­கும் எனக் குறிப்­பிட்­டார் .

இந்து அறக்­கட்­டளை வாரி­யத் துணைத் தலை­வ­ரும், முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முனைவர் இரா. தின­க­ரன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு தமி­ழ­வேள் விருது வழங்­கிச் சிறப்­பித்­த­து­டன், நிகழ்­வில் உரை நிகழ்த்­தி­னார்.

முத்­த­மிழ் விழா­வின் வெள்ளி விழா­வை­யொட்டி, வாழ்த்­துச் செய்தி­கள், கட்­டு­ரை­கள், சிறு­க­தை­கள், அடங்­கிய வெள்ளி விழா சிறப்பு மலர் வெளி­யீடு கண்­டது.

சிறப்பு விருந்­தி­னர் முனைவர் தின­க­ரன் வெளிட்ட வெள்ளி விழா மல­ரின் முதல் பிர­தி­யைப் முனை­வர் சுப திண்­ணப்­பன் பெற்­றுக் கொண்­டார். வெள்­ளி­விழா மல­ரின் சிறப்­புக் குறித்து, மல­ரா­சி­ரி­யர் திரு நா ஆண்­டி­யப்­பன் உரை நிகழ்த்­தி­னார்.

நிகழ்­வின் இறு­தி­யில் சிறப்­புரை ஆற்­றிய, திரைப்­பட நடி­கர், கவி­ஞர் ஜோ மல்­லூரி, ‘தமி­ழால் உலகை வெல்­வோம்’ எனும் தலைப்­பில் தமி­ழின் சிறப்­பை­யும், உல­கில் தமி­ழர்­க­ளின் வெற்­றி­யை­யும், வெற்றி பெற கைக்­கொள்ள வேண்­டிய வழி­க­ளை­யும் அழகு தமி­ழில் அருவி­போல் உரை நிகழ்த்­தி­னார்.

நிகழ்­வில் எழுத்­தா­ளர் கழ­கச் செய­லா­ளர் திரு­வாட்டி கிருத்­திகா வர­வேற்­புரை ஆற்ற, துணைச் செய­லா­ளர் திரு கோ இளங்­கோ­வன் நன்றி கூறி­னார். நிகழ்வை டாக்­டர் சர­வ­ணன் சண்­மு­கம் தொய்­வின்றி நெறிப்­ப­டுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!