பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு செங்காங் குழுத்தொகுதி எம்.பி.க்கள் தேர்வு

பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு செங்காங் குழுத்தொகுதி எம்.பி.க்கள் தேர்வு

2 mins read

இவ்­வாண்டு பொதுத் தேர்­த­லில் செங்­காங் குழுத்­தொ­கு­தி­யில் வெற்றி பெற்ற தனது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சியின் மத்­திய செயற்­கு­ழு­வுக்­குத் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார்­கள் என்று பாட்­டா­ளிக் கட்சி நேற்று நடை­பெற்ற கட்­சித் தேர்­லுக்­குப் பிறகு தெரி­வித்­தது.

திரு­வாட்டி ஹி டிங் ரு, 37, டாக்­டர் ஜேமஸ் லிம், 44, திரு­வாட்டி ரயீசா கான், 27, திரு லுயிஸ் சுவா, 33, ஆகி­யோரே அந்த நால்­வர்.

மேலும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­கு­தி­யில் தோல்­வி கண்ட குழு­வில் இடம்­பெற்ற குமாரி நிக்­கோல் சியா, 34, திரு கென்­னத் ஃபூ, 43, ஆகி­யோ­ரும் மத்­திய செயற்­கு­ழு­வுக்­குத் தேர்வு பெற்­றி­ருக்­கின்­ற­னர்.

கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரான 44 வயது திரு பிரித்­தம் சிங், தலை­வ­ரான 55 வயது திரு­வாட்டி சில்­வியா லிம் இரு­வ­ரும் தங்­கள் பத­விக்கு மீண்­டும் தேர்வு பெற்­ற­னர்.

அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்வு பெற்ற கட்­சி­யின் முன்­னாள் தலை­மைச் செய­லா­ள­ரான 64 வயது திரு லோ தியா கியாங், ஹவ்­காங் தனித்­தொ­கு­தி­யின் முன்­னாள் எம்.பி.யான 59 வயது திரு பிங் எங் ஹுவாட் இரு­வ­ரும் மத்­திய செயற்­கு­ழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

திரு சிங், திரு­வாட்டி லிம்­மின் சக அல்­ஜு­னிட் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான திரு முகம்­மது ஃபைசல் அப்­துல் மனாப், 45, திரு ஜெரால்ட் கியாம், 43, திரு லியோன் பெரேரா, 50 ஆகி­யோ­ரு­டன் ஹவ்­காங் எம்.பி. திரு டெனிஸ் டான், 50 ஆகி­யோ­ரும் பாட்­டா­ளிக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

அல்­ஜு­னிட் குழுத்­தொ­கு­தி­யின் முன்­னாள் எம்.பி. திரு சென் ஷோ மாவ், முன்­னாள் தொகு­தி­யில்லா எம்.பி. திரு டேனி­யல் கோ இரு­வ­ரும் மத்­திய செயற்­கு­ழு­வில் இடம்­பெ­ற­வில்லை என்­றா­லும் அவர்­கள் கட்­சி­யின் உறுப்­பி­னர்­க­ளாக தொடர்­வார்­கள்.

மத்­திய செயற்­கு­ழு­வில் முன்பு இடம்­பெற்­றி­ருந்த திரு ஃபிரோஸ் கான், திரு­வாட்டி லீ லி லியான், டாக்­டர் ஜான் யாம், திரு டெரன்ஸ் டான் ஆகி­யோ­ரும் இப்­போது தேர்­வா­க­வில்லை.

கட்­சித் தேர்­த­லுக்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய குமாரி நிக்கோல் சியா, தமக்கு ஆத­ர­வ­ளித்த கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்கொண்­டார்.

பின்­னர் பேசிய திரு சிங், "1980களி­லி­ருந்து கட்­சி­யில் உறுப்­பி­ன­ராக இருக்­கும் திரு லோ தியா கியாங் போன்று அனு­ப­வ­மிக்க தலைவரைத் தக்க வைத்­துக்­கொள்­வது கட்­சி­யின் முக்­கிய கொள்­கை­களில் ஒன்று. அவ­ரி­ட­மி­ருந்து கட்சியின் இளைய உறுப்­பி­னர்­கள் அதி­கம் கற்­றுக்­கொள்ள முடி­யும்," என்­றார்.