புத்தாக்க இந்தியக் கலையகம் படைத்த '6 முதல் 60 வரை தலை முறை தாண்டிய தமிழ்' நிகழ்ச்சி, இ்ம்மாதம் 18ஆம் தேதி 31 இணை யத் தளங்களில் நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்றது.
சிங்கப்பூரில் தமிழ் மற்றும் தமி ழர்கள் வாழ்ந்த பல இடங்களைப் பின்னணியாகக் கொண்டு காட்சி அமைப்புக்களுடன் ஆடல், பாடல், நகைச்சுவை, சிறப்புப் பேட்டிகள் என பல்சுவை நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டிருந்தன.
கனடா நாட்டின் MonTamil.CA தொலைக்காட்சி நிலையம், நேரலையாக நிகழ்ச்சியை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தது.
நிகழ்ச்சியின் இளைய தொகுப்பாளர் ஸ்ரீராம், இந்நிகழ்ச்சி தன்னைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு கடந்தகால தமிழ் சிங்கப்பூரில் வேரூன்றி வளர நம்மவர்கள் இட்ட தடங்களை அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது என்றார்.
தமிழ்நாடு இணையப் பல்கலைக் கழகத்தின் முனைவர் செ. சத்தியமூர்த்தி, பனைஓலை முதல் புத்தாக்க உலகில் தமிழ் பற்றி சிறப்புப் பகிர்வுரை வழங்கினார்.
தமிழ்நாடு SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு க சண்முகம், "கணிப் பொறியில் புதுத்தமிழ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கலையரசி, முத்துலட்சுமி, சித்ரா தேவி ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான 'வாழ்நாள் கற்றல் வழி தமிழ்' நகைச்சுவை அங்கத்தில், இணைய நேரடி நடிப்பு முறையில் நம் நாட்டின் கலைச்சிற்பி திரு இஎஸ்ஜே சந்திரன், தமிழகத்தில் இருந்து பங்குபெற்றார்.
இசைக்கலைஞர் திரு சங்கர் ராஜன், தமிழிசையின் மேன்மை, திரையுலகில் ராகங்களால் மொழி பெற்ற உயர்வை சுவாரஸ்யமாக விளக்கினார்.
கின்னஸ் சாதனையாளர் திருமதி விஜயா மோகன், தமிழர்களின் பாரம்பரியத்தின் அங்கமான கோலமிடுதல், படிக்கோலம் இடும் முறைகளை விளக்கினார்.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம் பற்றி திரு மணிகண்டன் செய்முறை விளக்கத்துடன் பெண்கள் கலந்து பயனுறும் வகையில் படைத்தார்.
நிகழ்ச்சி சார்ந்த இணைய புதிர் போட்டியில் சரியான விடையளித்த வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் பதிவைக் காண https://youtu.be/5QN5JSGGeTE

