கவிமாலை நடத்திய 'கவியாடும் முன்றில்'

2 mins read
7c34280c-c415-46a2-ae09-05e0a26e2cc0
இவ்வாண்டுக்கான கணை­யாழி விருதை திரு விக்ரம் நாயரிடம் இருந்து பெற்றுக்கொண்டார் மேடை நாட­கக் கலை­ஞர் திரு இராம். நாரா­ய­ண­சாமி (வலது).படம்: கவிமாலை -

கவி­மாலை இம்­மா­தம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு இணை­யம் வழி நடத்­திய 'கவி­யா­டும் முன்­றில்' என்ற நிகழ்ச்­சி­யு­டன் மாதம் முழு­வ­தும் இடம்­பெற்ற 2020 தமிழ்­மொழி விழா நிறை­வ­டைந்­தது.

தமி­ழக தொல்­லி­யல், தமிழ் வளர்ச்­சித் துறை அமைச்­சர் கே. பாண்­டி­ய­ரா­சன் 'ஸூம்' வழி­யாக உரை­யாற்­றி­னார்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் எஸ். மனோ­க­ரன், தமிழ்­மொழி மாதம் 2020 நிறை­வுரை ஆற்­றி­னார். சிங்­கப்­பூ­ரி­லுள்ள தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு, நன்­கொ­டை­யா­ளர்­கள் ஆகி­யோ­ரின் உத­வி­யு­டன் அனைத்­துத் தமிழ் அமைப்­பு­க­ளு­டன் இணைந்து வளர்­த­மிழ் இயக்­கம் இவ்­வாண்­டின் தமிழ்­மொழி விழா நிகழ்ச்­சி­களை சிறப்­பாக நடத்தி முடித்­த­தைப் பெரு­மை­யா­கக் குறிப்­பிட்­டார்.

விழா­வின் சிறப்பு விருந்­தி­ன­ரான செம்­ப­வாங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்­ரம் நாயர் உரை­யாற்­றி­ய­போது, கவி­தை­கள் இல்­லா­விட்­டால் 2000, 5000 ஆண்­டு­க­ளுக்கு முந்­திய நமது தொன்மை, பண்­பாடு, கலா­சா­ரம், காதல், வீரம், கொடை போன்ற அரிய பண்­பு­ந­லன்­கள் பற்றி நமக்­குத் தெரி­யா­மலே போயி­ருக்­கும். திருக்­கு­றள், தொல்­காப்­பி­யம் போன்ற பழம்­பெ­ரும் இலக்­கி­யங்­களை அறி­யா­மல் போயி­ருப்­போம் என்­றார்.

சிங்­கப்­பூர் அரசு கொரோ­னா­வைக் கட்­டுப்­படுத்­தி­ய­தை­யும், தமி­ழுக்கு அளித்­து­வ­ரும் ஆத­ர­வை­யும் விரி­வாக எடுத்­துக் கூறி­னார்.

கவி­மா­லை­யின் தலைவி கவி­ஞர் இன்பா தமது தலை­மை­யு­ரை­யில், கொரோனா காலத்­தி­லும், கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளா­க சிங்­கப்­பூ­ரில் தொய்வு இல்­லா­மல் கவி­மாலை பணி­யாற்றி வந்த பணி­க­ளை­யும், மாண­வர்­க­ளுக்­கான சேவை­க­ளை­யும் காணொளி மூலம் காட்டி விளக்­கி­னார்.

மாதந்­தோ­றும் நடை­பெற்ற கவி­மா­லை­யின் கவிதைப் போட்­டி­யில் கலந்­து­கொண்டு அதி­க­மான பரிசு­க­ளைப் பெற்­றி­ருந்த கவி­ஞர் பிர­பா­தே­விக்கு விழா­வில் 'இளங்­கவி­ஞர் தங்க முத்­திரை' விருதை திரு விக்­ரம் வழங்­கிச் சிறப்­பித்­தார்.

அதே­போல் ஆண்­டு­தோ­றும் தமி­ழுக்­காக சிறப்­பான பங்­க­ளிப்­பைத் தந்த ஒரு­வ­ருக்கு எம்.ஏ. முஸ்­தபா வழங்­கும் இலக்­கி­யக் கணை­யாழி விருது கொடுத்­துச் சிறப்­பிப்­பது வழக்­கம். அந்­தக் கணை­யாழி விரு­தினை மேடை நாட­கக் கலை­ஞர் திரு இராம். நாரா­ய­ண­சாமி பெற்­றார்.

இறு­தி­யில் முற்­றி­லும் மாண­வர்­கள் கலந்­து­கொண்டு, மர­புக் கவி­தை­க­ளை­யும், புதுக்­க­வி­தை­க­ளை­யும் பல்­வேறு தலைப்­பு­களில் பல்­வேறு கவி­ஞர்­க­ளின் கவி­தை­களை அழ­கு­டன் வாசித்­துக் காட்­டி­னார்­கள்.

அந்த நிகழ்ச்­சிக்­குத் தமி­ழா­சி­ரி­யர் முனை­வர் மன்னை இரா­ச­கோ­பால் தலைமை வகித்­தார். செய­லா­ளர் மு. சேவ­கன் நன்­றி­யு­ரை­யு­டன் விழா நிறைவு பெற்­றது.

நிகழ்ச்­சியை மாண­வி­கள் விஷ்­ணு­வர்­தி­னி­யும் முத்து சுவே­தா­வும் தொகுத்து வழங்­கி­னார்­கள்.