'கால்குலெய்ட்' உதவியுடன் சம்பள சச்சரவுக்குத் தீர்வு

'கால்குலெய்ட்' உதவியுடன் சம்பள சச்சரவுக்குத் தீர்வு

3 mins read
4b46bebe-88f8-42fb-aca5-a82837a3fabb
-

இந்து இளங்­கோ­வன்

கொள்ளை நோய் வாட்­டத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வேலைக்­குச் செல்ல இய­லா­மல் தங்­க­ளின் தங்­கும் விடு­தி­க­ளி­லேயே அடைப்­பட்டு தவித்­த­னர். அவ்­வாறு வரு­மா­னம் ஈட்ட இய­லா­மல் போன­வர்­க­ளுக்­குச் சம்­பள விவ­கா­ரத்­தில் கைகொ­டுக்க முனைந்­தது 'லீகல் காக்கி' குழு.

'நீதி பெறு­வ­தில் உங்­கள் நண்­பன்' என்­பதை முழக்­க­வ­ரி­யா­கக் கொண்டு செயல்­பட்டு வரு­கின்­ற­னர் லீகல் காக்கி குழு­வைச் சேர்ந்த சாம்­பவி ராஜாங்­கம் (22), நுர் ஷுக்­ரீனா (22), அப்­யுதே சமா­தர் (22), ஜோயி சங் (22) ஆகி­யோர்.

சிங்­கப்­பூர் நிர்­வாக பல்­க­லைக்­க­ழ­க­தில் பயி­லும் இந்­நான்கு மாண­வர்­களும், 'கால்­குெலய்ட்' என்ற இல­வச சம்­ப­ளத் தொகை கணிப்பு கரு­வியை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

ஒரு­வர், சம்­ப­ளத்­திற்கு உரிமை கோர தகு­தி­யுள்­ள­வரா என்­பதை மதிப்­பீடு செய்ய உத­வு­வ­து­டன் உரி­மை­கோ­ரல் செயல்­முறை குறித்த வழி­காட்­டு­தல்­க­ளை­யும் 'கால்­குெலய்ட்' திட்­டம் வழங்­கு­கிறது.

ஒரு­வர் சம்­ப­ளம் சார்ந்த உரி­மை­கோ­ரல்­க­ளைச் சட்­டத்­தின் முன் முன்­வைக்­கும்­பொ­ழுது வழக்­கின் முதல் கட்­ட­மாக ஒரு நடுவர் முன்­னி­லை­யில் சம­ரச பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­கிறது.

இந்தப் பேச்சு வார்த்­தை­யில் வழக்­க­றி­ஞர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்டா. எனவே கோரிக்கை முன்வைப்பவர்கள் தங்­களுக்கு உரியனவற்றை முழு­மை­யா­க­வும் தெளி­வா­க­வும் அறிந்­து­கொள்­வ­தோடு தங்­க­ளது சம்­ப­ளம் பற்­றிய முறை­யான கணக்­கீ­டு­க­ளைக் கொண்­டி­ருப்­பது மிக­வும் அவ­சி­யம்.

பொது­வாக இது­போன்ற வழக்­கு­களில் ஈடு­படும் தொழி­லா­ளர்­க­ளுக்கு தங்­க­ளது உரி­மை­கள், சம்­பள கணக்­கீ­டு­கள் பற்­றி போது­மான அறி­வும் விழிப்­பு­ணர்­வும் இருப்­ப­தில்லை. வழக்­கில் பிர­தி­வா­தி­கள் பொது­வாக வேலை தந்த முத­லா­ளி­க­ளாக இருக்­கின்­ற­னர். தொழி­லா­ளர்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவர்­க­ளுக்­குச் சட்­ட அறி­வும் தக­வல்­களும் அதி­க­மா­கவே இருக்­கும். மேலும் தொழி­லா­ளர்­கள் அவர்­க­ளது உரி­மை­கோ­ரல் படி­வத்­தைச் சரி­யாக நிரப்­ப­வில்லை என்­றால் அது வழக்­கின் முடி­வைப் பாதிக்­க­லாம்.

இது போன்ற நியா­ய­மற்ற நிலை­மை­யைத் தவிர்க்க, வெளி­நாட்டு ஊழி­யர்­கள் போன்ற தொழி­லா­ளர்­க­ளுக்­குத் தங்­க­ளது சம்­பள கணக்­கீ­டு­கள், வேலை­வாய்ப்பு உரி­மை­க­ளைக் குறித்த விழிப்­பு­ணர்வு, அடிப்­படை சட்ட அறிவு ஆகி­யவை இருப்­பது மிக முக்­கி­யம். இவை­ய­னைத்­தி­லும் வழி­காட்­டு­தல்­கள் வழங்கி பய­னா­ளி­க­ளுக்கு உத­விக்­

க­ரம் நீட்­டு­கிறது 'கால்­குெலய்ட்'.

இந்­தக் கணிப்பு கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி அடிப்­படை சம்­ப­ளம், மொத்த சம்­ப­ளம், ஓய்வு தின சம்­ப­ளம், பொது விடு­முறை தின சம்­ப­ளம், மிகை நேர சம்­ப­ளம் ஆகி­ய­வற்­றைக் கணிக்­க­லாம். இந்த சேவை வெளி­நாட்டு ஊழி­யர்­களை எளி­தாக சென்­ற­டை­ய­வேண்­டும் என்ற நோக்­கில் ஆங்­கி­லம், மலாய், தமிழ், வங்­கா­ளம், பர்­மிய மொழி­க­ளி­லும் வழங்­கப்­ப­டு­கிறது.

"வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளது தங்­கு­மி­டங்­களில் தனி­மைப்­

ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­லும் வேலை செய்ய முடி­யா­ம­லும் இருப்­ப­தால், அவர்­க­ளுக்­குத் தொடர்ந்து சம்­ப­ளம் வழங்­கப்­ப­டுமா என்­பது குறித்து அவர்­க­ளி­டையே கவ­லை­கள் பல இருந்­தன. மனி­த­வள அமைச்சு ஆலோ­ச­கர்­க­ளின் கூற்­றுப்­படி, அவர்­க­ளின் முத­லா­ளி­கள் அவர்­க­ளுக்கு பொருத்­த­மான விடுப்பு மற்­றும் சம்­பள ஏற்­பா­டு­களை செய்து தர­வேண்­டும். இருப்­பி­னும், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே நம்­பிக்­கை­யின்மை நிலவி வரு­கிறது. மேலும் வழக்கு தொடுக்­கும்­

பொ­ழுது மொழித் தடை, சட்ட உரி­மை­கள் குறித்த விழிப்­பு­ணர்வு மற்­றும் புரி­தல் இல்­லாமை, வேலை­வாய்ப்பு உரி­மை­கோ­ரல் தீர்ப்­பா­யத்­தில் சட்­ட­பூர்வ பிர­தி­நி­தித்­து­வம் இல்­லாமை உள்­ளிட்ட தடை­க­ளைச் சந்­திக்­கின்­ற­னர் நம் வெளி­நாட்டு ஊழி­யர்­கள்," என்று கூறி­னார் குழு உறுப்­பி­னர் சாம்­பவி.

இத்­த­கைய தடை­க­ளி­லும் சிக்­கல்­க­ளி­லும் முடிந்­த­வரை தீர்ப்­ப­தற்­கான ஒரு பதி­லாக 'கால்­கு­லைட்' அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூர் வழக்கறிஞர்கள் சங்கம், 'செக்­பாக்ஸ்-ஏஐ' ஆகி­ய­வற்­றின் ஆதா­ர­வோடு இக்­குழு 'கால்­கு­லைட்'டை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. 'கால்­கு­லைட்'டைப் பயன்­ப­டுத்த calculaid.sal.sg என்ற இணை­யப்­பக்­கத்தை அணு­க­லாம்.