கொவிட்-19: சமூகத்தில் ஒருவருக்கு கிருமித்தொற்று

கொவிட்-19: சமூகத்தில் ஒருவருக்கு கிருமித்தொற்று

1 mins read
6e71feaf-63d5-45b1-a450-16754fe810b5
-

சிங்கப்பூரில் மேலும் ஐந்து புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இன்று பதிவாகியுள்ளன. இவற்றுடன் சேர்த்து இந்நாட்டின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 58,529க்கு உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இந்த ஐவரில் நால்வருக்கு கிருமித் தொற்று வெளிநாட்டில் ஏற்பட்டது. இவர்கள் சிங்கப்பூரை வந்தடைந்ததுடன் வீட்டில் தங்கும் உத்தரவில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சமூகத்தில் ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ஊழியர் தங்கும் விடுதிகளில் இம்முறை எவரும் பாதிக்கப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமையன்று ஐந்து பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்றியது. இவர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்று வெளிநாடுகளில் ஏற்பட்டது. இந்த ஐவரில் ஊழியர் அனுமதி அட்டையைக் கொண்டுள்ள அந்த 23 வயது பெண் ஊழியர் மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப்பூரில் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றி டிசம்பர் 20ஆம் தேதி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டார். அதே நாளில் சுகாதார அமைச்சு, அக்டோபர் 22ஆம் தேதிக்கும் நவம்பர் 11ஆம் தேதிக்கும் இடையே அந்த ஹோட்டலில் தங்களது வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றிய 13 பேரின் மீது தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.