டவுண்டவுன் ரயில் பாதையில் கோளாறு

1 mins read
d80c5861-e639-42df-87f8-8d2a0adb5cb5
-

டவுண்டவுன் ரயில் பாதையில் சமிக்கை கோளாறு காரணமாக எக்ஸ்போ நிலையத்திற்கும் கேலாங் பாரு நிலையத்திற்கும் இடையிலான பயணங்கள் கூடுதலாக 15 நிமிடங்கள் ஆகலாம். இந்த அறிவிப்பை எஸ்பிஎஸ் டிரான்சிட் இன்றிரவு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தது.

இன்று மாலை ஆறு மணி முதலாக பல பயணிகள் சேவை பாதிப்பு குறித்து தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவு செய்திருந்தனர். அத்துடன், மெக்பர்சன் எம்ஆர்டி நிலையத்தில் நீண்ட வரிசைகளாக மக்கள் நின்றுகொண்டிருந்தனர்.