புதிய தலைவரைப் பெறும் சர்பனா ஜூரோங்

1 mins read
d22bbc65-21bb-46c1-b3c5-7496301d7276
சர்­பனா ஜூரோங் நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப் பேற்கும் திரு சாலி மா (இடது), முன்னாள் தலைவர் திரு லியூ மன் லியோங். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் பார்தி லியானி என்ற முன்­னாள் பணிப்­பெண் குற்­ற­மற்­ற­வர் என்று விடு­விக்­கப்­பட்ட விவ­கா­ரம் அண்­மை­யில் பெரி­தும் பேசப்­பட்­டது. அந்­தப் பணிப்­பெண்­ணின் முத­லா­ளி­யான லியூ மன் லியோங் 'சர்­பனா ஜூரோங் குழுமம்' என்ற ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் தலை­வ­ராக இருந்து வந்­தார்.

ஆனால் பணிப்­பெண் பிரச்­சினை விஸ்­வ­ரூ­பம் எடுத்­ததை அடுத்து அந்­தப் பத­வி­யில் இருந்து அவர் இந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் ஓய்வு பெற்­று­விட்­டார்.

அவ­ருக்­குப் பதி­லாக சாலி மா சீ கியோங் அந்­தப் பத­விக்கு இப்­போது நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்.

திரு மா, 64, புதிய பொறுப்பை ஜன­வரி 1 முதல் அதி­கா­ர­பூர்­வ­மாக மேற்­கொள்­கி­றார். இவர் இப்­போது சிங்­கப்­பூர் பய­ணத்துறைக் கழ­கத்­தின் தலை­வ­ராக இருக்­கி­றார்.

சிங்கப்பூர் நாணய ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகளின் நிர்வாக சபைகளிலும் இவர் இடம்பெற்று இருக்கிறார். திரு மா, சிங்கப்பூர் நில ஆணையத்தின் தலைவராக முன்பு பணியாற்றியவர்.

சர்­பனா ஜூரோங் நிறு­வ­னத்தை ஏற்­ப­டுத்­திய திரு லியூ, அதன் தலை­வ­ரா­க­வும் இருந்து வந்­தார்.

பணிப்­பெண் விவ­கா­ரத்­தைத் தொடர்ந்து சாங்கி விமா­ன­நி­லை­யக் குழு­மத்­தின் தலை­வர் பத­வி­யில் இருந்­தும் திரு லியூ வில­கிக்­கொண்­டார்.

சர்­பனா ஜூரோங் நிறு­வ­னத்­திற்குத் திரு லியூ ஆற்­றிய பணி­களுக்­காக திரு மா அவ­ருக்கு நன்றி தெரி­வித்­துக்கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக் கொண்டு செயல்­படும் இந்நிறு­வனம் 16,000க்கும் மேம்­பட்­ட­வர்­க­ளுக்கு வேலை கொடுக்­கிறது. 30க்கும் அதிக நாடு­களில் விரி­வ­டைந்து இருக்­கிறது. பரந்த அள­வில் ஆலோ­சனை சேவை­களை இது வழங்கி வரு­கிறது.