50 ஆண்டு நிறைவை அனுசரிக்கும் ஜூரோங் பறவைப் பூங்கா; உள்ளூர்வாசிகளுக்கு $2.50 விலையில் நுழைவுச்சீட்டு விற்பனை

அடுத்த மாதம் 3ஆம் தேதி 50ஆம் ஆண்டு நிறை­வைக் கொண்­டாட இருக்­கும் ஜூரோங் பற­வைப் பூங்கா, அதை­யொட்டி நுழை­வுக் கட்­ட­ணங்­க­ளைக் குறைக்­க­வி­ருக்­கிறது; பற­வை­கள் இடம்­பெ­றும் சிறப்­புக் காட்­சி­களை நடத்­த­வி­ருக்­கிறது.

2021 ஜன­வரி மாதம் முழு­வ­தும் உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு $2.50 விலை­யில் நுழை­வுச்­சீட்­டு­கள் விற்­கப்­படும். 1971ஆம் ஆண்­டில் இப்­பூங்கா திறக்­கப்­பட்­ட­போது நுழை­வுக்­கட்­ட­ணம் இரண்­டரை வெள்­ளி­தான் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வழக்­க­மாக பெரி­ய­வர்­க­ளுக்கு 32 வெள்­ளி­யும், மூன்று முதல் 12 வயது வரை­யி­லான சிறா­ருக்கு 21 வெள்­ளி­யும், 60 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட மூத்த குடி­மக்­க­ளுக்கு 15 வெள்­ளி­யும் நுழை­வுக்­கட்­ட­ண­மாக வசூ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கொவிட்-19 சூழ­லில் கூட்­டத்தை நிர்­வ­கிக்­க­வும் பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­க­ளுக்­கும் ஏது­வாக, நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்கு முன்­ப­திவு அவ­சி­யம் என்று சிங்கப்பூர் வன­விலங்குக் காப்­ப­கம் தெரி­வித்­துள்­ளது.

ஜன­வ­ரி­யில் ‘பிக் ஜான்’ எனப் பெயர் கொண்ட ‘காக்­கட்டூ’ வெண்­கிளி பங்­கு­பெ­றும் சிறப்பு ‘ஹை ஃபிளையர்ஸ்’ நிகழ்ச்­சியை வரு­கை­யா­ளர்­கள் எதிர்­பார்க்­க­லாம்.

அத்­து­டன், கடந்த ஆண்­டு­களில் பற­வைப் பூங்­கா­வின் உரு­மாற்­றம், அதன் வர­லாற்­றுச் சிறப்பு­மிக்க தரு­ணங்­கள், எதிர்­கால மேம்­பாட்டுத் திட்டங்கள் ஆகி­ய­வை­யும் காட்சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

தொடக்க நாள்­களில் பற­வைப் பூங்கா எவ்­வாறு இருந்­தது, 1972ல் பிரிட்­டிஷ் அரச குடும்­பத்­தா­ரின் வருகை முத­லிய புகைப்­ப­டங்­கள் காட்­சிக்கு வைக்­கப்­படும்.

வரு­கை­யா­ளர்­கள் $50 பங்­க­ளித்து, அடுத்த ஆண்­டில் அடை­யா­ள­பூர்­வ­மாக ஒரு செந்­நா­ரையை (ஃபிளமிங்கோ) வளர்க்­க­லாம். ஒவ்­வொரு பங்­க­ளிப்­பிற்­கும் ஒரு மின்­னி­லக்­கச் சான்­றி­த­ழும் ஒரு செந்நாரை சாவி வளை­யத்­திற்­கான பற்­றுச்­சீட்­டும் வழங்­கப்­படும்.

விலங்­கு­க­ள் பரா­ம­ரிப்பு, பூங்­காக்­கள் தொடர்­பான ஆய்வு, கல்­வித் திட்­டங்­கள் உள்­ளிட்ட நட­வடிக்­கை­க­ளுக்­கும் அந்­தப் பங்­க­ளிப்­புத் தொகை பயன்­ப­டுத்­தப்­படும் என்று வன­விலங்குக் காப்­ப­கம் தெரி­வித்து இருக்­கிறது.

அடுத்த ஆண்டு பல கொண்­டாட்ட நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­துள்ள பற­வைப் பூங்கா, மார்ச் மாதத்­தில் தனது முத­லா­வது மின்­னி­லக்க அடிச்­சு­வட்­டை­யும் அறி­முகப்­ப­டுத்­த­வுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!