அதிபர் ஹலிமா: அடுத்த ஆண்டை நாம் வலுவாக எதிர்கொள்வோம்

அதிபர் ஹலிமா: அடுத்த ஆண்டை நாம் வலுவாக எதிர்கொள்வோம்

2 mins read
85004859-1f90-43dc-9af1-aabcd7f76c1a
படம்: அதிபர் ஹலிமா யாக்கோப்/ஃபேஸ்புக் -

கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படுத்­திய கடு­மை­யான பொரு­ளி­யல் மற்­றும் சமூக இடை­யூ­று­க­ளைத் தாண்டி அசா­தா­ர­ண­மான, சவால்­மிக்க ஆண்­டின் இறு­தி­யில் வந்து­விட்­டோம்.

அந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து தைரி­ய­மாக வெளி­வந்து அடுத்த தலை­மு­றை­க­ளுக்கு ஒரு மேம்­பட்ட எதிர்­கா­லத்தை உரு­வாக்க சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 நெருக்­கடி விளை­வித்த பற்­பல சவால்­க­ளை­யும் எதிர்­கொள்­ளும் ஆற்­ற­லை­யும் மனத்­திடத்­தை­யும் பெற்­றுள்ள நாம், மீள்­தி­ற­னு­டன் முன்­னே­றிச் செல்ல வேண்­டும் என்று இஸ்­தானா நேற்று வெளி­யிட்ட அதி­ப­ரின் புத்­தாண்டு தினச் செய்தி பற்றிய காணொ­ளி­யில் திரு­வாட்டி ஹலிமா வலி­யுறுத்­தி­யுள்­ளார்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு முந்­தைய காலத்­துக்கு நாம் திரும்பிப் போக முடி­யாது என்­பதை மன­தில் நிறுத்தி, நாம் இது­வரை நமது வாழ்க்­கை­யில், வேலை­யில், வர்த்­த­கங்­களில் ஏற்­றுக்­கொண்ட மாற்­றங்­களை மறு­ஆய்வு செய்­யும் தரு­ணம் இது.

"தொழில்­நுட்­பத்தை அதி­கம் பயன்­ப­டுத்­து­தல், பரு­வ­நிலை மாற்­றம் போன்ற நீண்­ட­கால சவால்­கள் போன்­ற­வற்றை தீவி­ரப்­ப­டுத்­தும் கட்­டா­யத்தை கொவிட்-19 உண்டு பண்­ணி­யுள்­ளது," என்று அதி­பர் விவ­ரித்­தார்.

"கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் சரிந்­துள்ள பொரு­ளி­ய­லைத் தூக்கி நிமிர்த்­தும் முயற்­சி­கள் தொடர்ந்து நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக, விமா­னத்­து­றை­யும் பய­ணத்­து­றை­யும் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

"அனைத்­துத் தரப்­பி­ன­ரின் ஒன்­றி­ணைந்த முயற்­சி­யால் இன்­னும் ஓரிரு ஆண்­டு­களில் முழு­மை­யான பொரு­ளி­யல் மீட்­சி­யைக் காண முடி­யும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டா­லும் அடுத்த பத்­தாண்­டு­களில் அதி­க­மான செல­வி­னத்­து­டன் மெது­வான வளர்ச்சியே நில­வும் என்று கணிக்­கப்­ப­டு­கிறது.

"நமது உள்­கட்­ட­மைப்­பி­லும் திறன் மேம்­பாட்­டி­லும் நாம் தொடர்ந்து முக்­கி­ய­மான முத­லீ­டு­களை செய்ய வேண்­டும். அப்­போது­தான் புதிய முத­லீ­டு­களை ஈர்த்து, அதன் மூலம் புதிய வேலை­களை உரு­வாக்க முடி­யும்," என்­றும் அதி­பர் ஹலிமா சொன்­னார்.

மற்ற நாடு­க­ளைப் போல சிங்­கப்­பூ­ரும் இறுக்­க­மான நிதி நிலைமை கார­ண­மாக, வர்த்­த­கங்­களுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் ஆத­ர­ வ­ளிக்க, நாட்­டின் நிதி இருப்­பி­ல் இ­ருந்து பணம் எடுக்க வேண்­டி­ய­தா­யிற்று என்­ப­தைச் சுட்­டிய அதி­பர், ஆக அண்­மை­யில் நவம்­பர் மாதத்­தில் கொவிட்-19 தொடர்­பிலான $8 பில்­லி­யன் கூடு­தல் ஆத­ரவு நிதிக்கு ஒப்­பு­தல் அளித்­ததை நினை­வு­கூர்ந்­தார்.

இந்த ஆண்டு சாதனை அள­வாக நான்கு வர­வு­செ­ல­வுத் திட்­டங்­கள் மூலம் கிட்­டத்­தட்ட $100 பில்­லி­யன் தொகையை செல­வ­ழிக்­கும் மசோ­தாக்­களை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்­டது.

அதில் சுமார் $52 பில்­லி­யன் நாட்­டின் நிதி இருப்­பி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பாது­காக்­கும் பொறுப்பை ஏற்­றி­ருக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் போன்ற முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் அனைவருக்கும் நன்றி தெரி­வித்துக்கொண்ட திரு­வாட்டி ஹலிமா, கொவிட்-19 தடுப்­பூசி கிடைத்­து­விட்­டது என்ற எண்ணம் மெத்­த­னப்­போக்­குக்கு இட்­டுச் செல்­லக்­கூ­டாது என்று நினை­வூட்­டி­னார்.

அனை­வ­ரும் தொடர்ந்து கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் முழு கவ­னம் செலுத்து­மா­றும் அதிபர் ஹலிமா கேட்டுக் கொண்டார்.