விமானப் போக்குவரத்துத் துறைக்கு மேலும் $84 மி. உதவி

கொரோனா கிரு­மித்­தொற்­றின் தாக்­கத்­தி­லி­ருந்து தொடர்ந்து மீண்டு­வ­ரும் பய­ணம் மெது­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­படும் நிலை­யில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறைக்கு அர­சாங்­கம் மேலும் $84 மில்­லி­யன் மதிப்­பி­லான ஆத­ரவை வழங்­க­வுள்­ள­து.

அதி­க­ரிக்­கும் செயல்­பாட்­டுச் செல­வு­கள், பயிற்­று­விப்­புத் திட்­டங்­கள், உற்­பத்­தித்­தி­ற­னில் முத­லீடு ஆகிய அம்­சங்­க­ளுக்கு இக்­கூ­டு­தல் நிதி ஆத­ரவு கைகொ­டுக்­கும்.

சிங்­கப்­பூ­ரின் விமான மையத்தை உயிர்ப்­பிக்­க­வும் மீண்­டு­வ­ரும் விமா­னப் பய­ணங்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரைத் தயார்ப்­ப­டுத்­த­வும் புதிய ஆத­ர­வுத் திட்­டங்­கள் முக்­கி­யம் என்று சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வரத்து ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

“எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து நடப்­பில் இருப்­ப­து­டன் குளிர்­கா­லத்­தில் மீண்­டும் கொவிட்-19 கிருமி பல நாடு­களில் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. இத­னால் விமா­னப் பய­ணங்­கள் விரை­வில் மீள முடி­யாது.

“அத­னால் விமா­னப் போக்­கு­வரத்­துத் துறைக்கு நல்­கும் ஆத­ர­வைத் தொடர்­வது மிக முக்­கி­யம். துறை சார்ந்த நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் இந்த நெருக்­க­டி­யைக் கடந்­து­வ­ர­வும் அது உத­வும்,” என்­றது ஆணை­யம்.

செலவுகளைச் சமாளிக்க $39 மி.

கொள்ளைநோயின்­போது ஏற்­பட்ட கூடு­தல் செல­வு­களை நிறு­வனங்­கள் சமா­ளிக்க $39 மில்­லியன் ஒதுக்­கப்­படும் என்­றது ஆணை­யம். பாது­காப்­பான விமா­னப் பய­ணங்­களை உறு­தி­செய்­வ­தற்­காக நிறு­வனங்­கள் குறிப்­பி­டத்­தக்க தொகை­யைச் செல­வ­ழித்­துள்­ள­தாக ஆணை­யம் விளக்­க­ம­ளித்­தது.

கட்­ட­ணங்­கள் தொடர்­பில் தொடர்ந்து கழி­வு­கள் வழங்­க­வுள்­ள­தா­க­வும் ஆணை­யம் குறிப்­பிட்­டது. சாங்கி விமான நிலை­யத்­தி­லும் சிலேத்­தார் விமான நிலை­யத்­தி­லும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி­வரை தரை செயல்­பா­டு­கள், உண­வுச் சேவை­க­ளுக்­கான உரி­மக் கட்­ட­ணங்­களில் 50% கழிவு தர­வுள்­ளது ஆணை­யம்.

பயிற்சியளிக்க $20 மி.

துறை­யில் உள்ள ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிப்­ப­தன் தொடர்­பில் சுமார் $20 மில்­லி­யன் ஒதுக்­கப்­ப­ட­வுள்­ளது. வேலையை இழக்­கும் அபா­யத்­தில் உள்ள விமா­னப் போக்கு­வ­ரத்து ஊழி­யர்­கள், புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொண்டு இதே துறை­யில் வேறு வேலை­களுக்கு மாற உதவி வழங்­கப்­படும். இதன் தொடர்­பி­லான விவ­ரங்­கள் ஜன­வரி மாதம் அறி­விக்­கப்­படும்.

வெளி­நாட்டு விமான நிறு­வனங்­க­ளால் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட சிங்­கப்­பூர் விமா­னி­கள், விமானி உரி­மத்­துக்­காக இங்­கேயே விண்­ணப்­பிக்­க­வும் இனி வாய்ப்பு வழங்­கப்­ப­டு­கிறது. இத­னால் உள்­ளூர் விமான நிறு­வ­னங்­களில் அவர்­கள் எதிர்­கா­லத்­தில் ஒரு வேலையை உறு­தி­செய்­து­கொள்­ள­வும் முடி­யும்.

வளர்ச்சி நிதிக்கு $25 மி.

விமா­னத்­துறை வளர்ச்சி நிதிக்கு எஞ்­சிய $25 மில்­லி­யன் ஒதுக்­கப்­படும். இத­னால் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி­வரை நிறு­வனங்­களுக்கு மேம்­ப­டுத்­தப்­பட்ட அள­வில் நிதி ஆத­ரவு கிடைக்­கும் என்­றது ஆணை­யம்.

“விமா­னப் பய­ணங்­களை மீண்­டும் பாது­காப்­பான முறை­யில் கொண்­டு­வ­ரு­வதே நம் இன்­றி­யமை­யாத பணியாகும். நமது விமா­னப் போக்கு­வரத்து மையத்தை மீண்­டும் உயிர்ப்­பிக்க வேண்­டும். இந்த கடி­ன­மான பய­ணத்தை நாம் மேற்­கொண்டு மீண்­டும் வானில் நம் இடத்­தைப் பிடிக்­க­வேண்­டும்,” என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் குறிப்­பிட்டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!