பள்ளிச் சீருடை கடைக்கு வெளியே கூட்டத்தைக் கலைத்த போலிஸ்; சீருடை வாங்க கூடுதல் அவகாசம்

பள்ளிச் சீருடை கடைக்கு வெளியே கூட்டத்தைக் கலைத்த போலிஸ்; சீருடை வாங்க கூடுதல் அவகாசம்

2 mins read
8cf508a4-2329-4cb0-9502-56c7753f9e1d
பள்ளிச் சீருடைகளை விநியோகிக்கும் 'ஜீப் சிங் ஃபேஷன்' கடை வெளியே நேற்று வரிசை பிடித்து நின்றுகொண்டிருந்த 100க்கும் மேற்பட்டோரில் சிலர் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பள்ளிச் சீருடைகள் வாங்க அடுத்த மாதம் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பள்­ளிச் சீருடை விற்­கும் இடத்­தில் அலை­மோ­திய கூட்­டத்தை போலி­சார் வந்து கலைக்க வேண்­டிய நிலை நேற்று ஏற்­பட்­டதையடுத்து இன்று (டிசம்பர் 30) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெவ்­வேறு பள்­ளி­க­ளின் சீருடை­களை விநி­யோ­கிக்­கும் 'ஜீப் சிங் ஃபேஷன்' கடை, புளோக் 4012 அங் மோ கியோ அவென்யு 10ல் அமைந்­துள்­ளது. விடு­முறை முடிந்து அடுத்த வாரம் பள்ளி திறக்­க­வுள்ள நிலை­யில் தங்­க­ளின் பிள்­ளை­களின் சீருடை வாங்­கு­வ­தற்­காக இக்­கடை வெளியே பலர் நீண்ட வரி­சை­யில் நேற்று காலை­யி­லேயே நிற்­கத் தொடங்­கி­னர்.

கடை காலை 10 மணிக்­குத்­தான் திறக்­கும். இருப்­பி­னும், சுமார் எட்டு மணிக்கே பெற்­றோர் பலர் கடைக்கு வந்து வரிசை எண்­ணைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

அவ்­வாறு கடை திறக்­கும் சம­யத்­தில் 100க்கும் மேற்­பட்­ட­வர்­களால் உரு­வான வரிசை பாம்­பு­போல் காணப்­பட்­டது. வரி­சை­யில் சிலர் ஒரு மீட்­டர் பாது­காப்பு இடை­வெளி விதியைக் கடைப்­பி­டிக்­காமல் நின்­று­கொண்­டி­ருந்­த­னர்.

இடை­வெளி குறித்து நின்­று­கொண்­டி­ருந்­த­வர்­க­ளி­டம் பின்­னர் அங்கு வந்து ஆறு போலிஸ் அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்­து­வ­தைக் காண முடிந்­தது. காத்­தி­ருக்க வேண்­டாம் என்­றும் சில­ரி­டம் அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்­தி­னர்.

அதை­ய­டுத்து வரிசை எண்­ணைப் பெற்­றுக்­கொண்ட சுமார் 70 பேர், தங்­க­ளின் முறை வரு­வ­தற்­காக காத்­தி­ருந்­த­னர்.

இதற்­கி­டையே வாடிக்­கை­யா­ளர்­கள் கடைக்கு வர­வேண்­டாம் என்று அந்த கடை அதன் இணை­யத்­தளத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

நேற்­றைக்கு ஒதுக்­கப்­பட்ட வரிசை எண்­கள் அனைத்­தும் முடிந்து­விட்­ட­தாக அது கூறி­யி­ருந்­தது.

இரண்டு மணி நேரம் கழித்தே தம்­மு­டைய மூன்று வயது மக­ளுக்­குப் பாலர் பள்­ளிச் சீரு­டையை வாங்க முடிந்­த­தாக கடல்­து­றை­யில் பணி­பு­ரி­யும் 46 வயது திரு ஷியோ குமார் என்­ப­வர் தம் அனுபவத்தைப் பகிர்ந்­து­கொண்­டார்.

பள்ளி ஜன­வரி 4ஆம் தேதி­யன்று திறக்­க­வுள்­ளது. இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் கடைக்கு வெளியே மூன்று மணி நேர­மாக அவர் காத்­தி­ருந்­தார்.

ஆனால் கூட்­டம் கார­ண­மாக மறு­நாள் வரு­மாறு அவ­ருக்­குக் கூறப்­பட்­டது. அதன் பின்­னரே நேற்று வரிசை பிடித்துச் சீரு­டையை வாங்­கி­விட்டார்.

இதன் தொடர்­பில் 'ஜீப் சிங் ஃபேஷன்' கருத்து கூற மறுத்­து­விட்­டது.

இணையம் வழியாக வாங்குவது, பொருள்களைப் பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட நேரத்தில் செல்வது போன்ற ஏற்பாடுகளை பெற்றோர் சீருடை விற்பனையாளர்களுடன் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்