கிருமிக்கு எதிரான போரில் புதிய அத்தியாயம் ஆரம்பம்

கிருமிக்கு எதிரான போரில் புதிய அத்தியாயம் ஆரம்பம்

1 mins read
fdff826d-8d06-4d83-b014-a65d790fddf7
-
multi-img1 of 2

தேசிய அள­வி­லான கொவிட்-19 தடுப்­பூசி திட்­டம் சிங்­கப்­பூ­ரில் நேற்று காலை­யி­லேயே தொடங்­கி­விட்­டது.

தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட இரண்­டா­வது நபர், 43 வயது மூத்த மருத்துவ ஆலோ­ச­கர் டாக்­டர் காளீஸ்வர் மாரி­முத்து.

கொவிட்-19 நோயா­ளி­கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­வோ­ரை­யும் உறு­தி­செய்­யப்­படு­வோ­ரை­யும் கவனித்து வரும் பணி­யில் உள்­ளார்.

"நான் அதிர்ஷ்­ட­சாலி. இந்த தடுப்­பூசி மருந்­தால் குறிப்­பி­டத்­தக்க மாற்­றம் ஏற்­படக்­கூ­டும் என்­ப­தால் சற்று உணர்ச்சி வசப்­படும் தரு­ண­மா­க­வும் எனக்கு இது உள்­ளது," என்­றார் அவர்.

"நீண்ட பய­ணத்­திற்­குப் பின் இக்­கட்­டத்தை நாம் அ­டைந்­துள்­ளோம். இதுவரை அனை­வ­ருக்­கும் சிர­ம­மான ஒரு கால­கட்­ட­மாக இருந்து வந்­துள்­ளது.

"இதற்­கு­முன் தடுப்­பூசி மருந்­து­க­ளால் கொள்­ளை­நோய்­கள் பல முறி­ய­டிக்­கப்­பட்டுள்­ளன. அத­னால் இந்த தடுப்­பூ­சி­யால் வர­லாறு மீண்­டும் எழு­தப்­ப­டட்­டும். இருண்ட பாதையின் முடி­வில் வெளிச்சம் தெரிவதற்கான நம்­பிக்­கை­ பிறந்துள்ளது," என்­றார் டாக்­டர் காளீஸ்வர்.

தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட அவர், "கூடு­தல் பாது­காப்பு கிடைத்­து­விட்­டது போல் எனக்கு இப்­போதே தோன்­று­கிறது. நமக்கு இந்­தத் தடுப்­பூ­சி­தான் இறு­திக்­கட்ட பாது­காப்பு அம்­ச­மாக இருக்­கக்­கூடும்," என்­றார்.