புத்தாண்டில் புது நம்பிக்கை; ஹாக்கி அணி தலைமைப் பயிற்றுநராக விஜயன் நியமனம்

2 mins read
1e02c3cf-44f1-4824-9550-b4385567b763
சிங்­கப்­பூ­ரின் வெற்­றி­க­ர­மான ஹாக்கி விளை­யாட்டு அணி­களில் அங்­கம் வகித்­த­வர் திரு கிருஷ்ணன் விஜ­யன் நாயுடு, 55 (படம்). தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்டி­களில் வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­களை இவர் வென்­றுள்ளார். -

சிங்­கப்­பூ­ரின் வெற்­றி­க­ர­மான ஹாக்கி விளை­யாட்டு அணி­களில் அங்­கம் வகித்­த­வர் திரு கிருஷ்ணன் விஜ­யன் நாயுடு, 55 (படம்). தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்டி­களில் வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­களை இவர் வென்­றுள்ளார்.

ஆனால், இவர் மேற்­கொண்ட ஓராண்­டு­கால பயிற்­று­விப்­பா­ளர் பணி, ஹாக்கி விளை­யாட்டு மீதான ஆர்­வத்­தைத் தூண்­டி­யது. இப்­போது 25 ஆண்­டு­கள் கழித்து, ஆட­வ­ருக்­கான தேசிய ஹாக்கி அணி­யின் தலை­மைப் பயிற்­று­விப்­பா­ளர் பொறுப்பை இவர் ஏற்­கிறார்.

1995ல் ராஃபிள்ஸ் கல்­விக் கழ­கத்­தின் ஹாக்கி அணிப் பயிற்று­விப்­பா­ளர் பொறுப்பை திரு விஜ­யன் தற்­கா­லி­க­மாக ஏற்­றார். ஓராண்டு காலத்­திற்கு ஓய்­வில் சென்ற பல்­பீர் சிங்­கி­டம் இருந்து இவர் அப்­பொ­றுப்பை ஏற்­றார்.

பயிற்­று­விப்­பா­ளர் அனு­ப­வம் இல்­லா­வி­டி­னும் ஆண்­க­ளுக்­கான 'பி' பிரி­வில் அப்­பள்­ளி­யின் வெற்­றிக்கு திரு விஜ­யன் வித்­திட்­டார்.

2003ல் சிங்­கப்­பூர் ஹாக்கி சம்­மே­ள­னத்­தில் இளை­யர் மேம்­பாட்டுப் பயிற்­று­விப்­பா­ளர் பொறுப்பு இவ­ருக்கு வழங்­கப்­பட்­டது. அதைத் தொடர்ந்து, பத்­தாண்டு காலத்­தில் 15க்கும் அதி­க­மான பள்­ளி­க­ளி­லும் ஆறு குழுக்­களுக்கும் இவர் பயிற்­று­வித்­தார்.

2016 ஆகஸ்ட்­டில் ஆட­வ­ருக்­கான தேசிய ஹாக்கி அணி­யின் உத­விப் பயிற்­று­விப்­பா­ள­ராக திரு விஜ­யன் நிய­மிக்­கப்­பட்­டார். 2017 தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் அந்த அணி மூன்றாம் இடத்­தைப் பிடித்­தது. ஓராண்டு கழித்து அனைத்­து­லக ஹாக்கி சம்­மே­ள­னப் பொது விருதுத் தொடரை அந்த அணி வென்­றது.

இப்­போது தேசிய அணி­யின் தலை­மைப் பயிற்­று­விப்­பா­ளர் பொறுப்பை திரு விஜ­யன் புத்­தாண்­டான நாளை ஏற்­கி­றார். இவ­ருக்கு ஈராண்­டு­கால ஒப்­பந்­தம் வழங்­கப்­பட்­டுள்­ளது. 2021 ஆசிய ஹாக்கி சம்­மேளனக் கிண்ணப் போட்­டி­யில் முத­லிரு இடத்தை எட்ட இவர் இலக்கு நிர்­ண­யித்­துள்­ளார். சீனா­வின் ஹாங்­ஸாவ் நக­ரில் நடை­பெ­றும் 2022 ஆசி­யப் போட்­டி­க­ளுக்­குத் தகுதி பெறு­வ­து இவரது மற்­றோர் இலக்கு.

மலே­சி­ய­ரான திரு கே. ராஜ­னி­டம் இருந்து தலை­மைப் பயிற்று­விப்­பா­ளர் பொறுப்பை திரு விஜயன் ஏற்­கி­றார். 2004ல் ரோனி இயோ­விற்கு பிறகு தலை­மைப் பொறுப்பை ஏற்­கும் முதல் உள்­ளூர்­வா­சி­ இவர்தான். தமது நிய­மனத்தை 'பெரு­மைக்­கு­ரிய தரு­ணம்' எனக் குறிப்பிட்டுள்ள இவர், தமது சாத­னை­க­ளைத் தொடர விரும்­பு­வ­தா­கவும் கூறி­னார்.

"தேசிய அணிக்கு தலை­மைப் பயிற்­று­விப்­பா­ள­ரா­க வேண்டும் என்பதே அனைத்து உள்­ளூர் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளின் கன­வா­க இருக்கும். என்­னால் எதைச் செய்ய முடி­யும் என்­பதை நான் காட்டியுள்ளேன். எனது திட்­டங்­களை நிறை­வேற்­று­வதே இப்­போது எனது தலை­யாய பணி," என்­றார் திரு விஜயன்.