விதிமீறிய கரவோக்கே நிலையத்தை 20 நாள்களுக்கு மூட உத்தரவு

விதிமீறிய கரவோக்கே நிலையத்தை 20 நாள்களுக்கு மூட உத்தரவு

1 mins read
697481dd-e4a9-4eca-abac-a99e3959c7a5
21 கஸ்கேடன் சாலையில் உள்ள எம்இசட்எஸ் கரவோக்கே நிலையத்தில் கிறிஸ்மஸ் நாளன்று இரவு 12.05 மணிக்கு 51 பேர் கூடி, மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. படம்: சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் -

கிறிஸ்­மஸ் நாளன்று கொவிட்-19 பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களுக்கு இணங்கி நடக்­கத் தவ­றிய கர­வோக்கே நிலை­யத்­தின் செயல்­பா­டு­களை 20 நாள்­க­ளுக்கு நிறுத்தி ­வைக்­கும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­டு உள்ளது.

ஆர்ச்­சர்ட் சாலை­யில் உள்ள 'எம்­இ­சட்­எஸ் ஃபேமிலி கர­வோக்கே' நிலை­யம் தனது வளா­கத்­தில் ஐந்­துக்கு மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­களை அனு­ம­தித்­த­தும் அவர்­களை இரவு 12.05 மணிக்கு மது அருந்த அனு­ம­தித்­த­தும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுச்­சூ­ழல் அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யில் இருந்து அந்த கர­வோக்கே நிலை­யம் தனது செயல்­பா­டு­களை நிறுத்தி வைத்துள்ளது.

பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கு இணங்கி நடக்­கா­தது தொடர்­பில் அந்­நி­லை­யத்­தில் இருந்த 51 வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் போலி­சார் விசா­ரித்து வரு­வ­தாக அமைச்சு கூறி­யது.

இத­னி­டையே, இம்­மா­தம் 18- 26ஆம் தேதி­க­ளுக்கு இடைப்­பட்ட காலத்­தில், பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை மீறி­ய­தற்­காக ஏழு உணவு, பானக் கடை­க­ளுக்­குத் தலா $1,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

ஐவ­ருக்கு மேல் அடங்­கிய குழு­வி­னரை அனு­ம­தித்து, ஒன்­றாக அமர வைத்­தது, வெவ்­வேறு குழுக்­கள் தங்­க­ளுக்­குள் கலக்க அனு­மதித்­தது, ஒரு மீட்­டர் இடை­வெளிக்­குள் குழுக்­களை அமர அனு­ம­தித்­தது, கேளிக்கை நிலை­ய­மாக இல்­லா­த­போ­தும் விளை­யாட்­டு­களை வழங்­கி­யது உள்­ளிட்ட விதி­மீ­றல்­கள் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­பட்­டது.