இறப்புக்குப் பிந்திய சடங்குகளைச் செய்ய சாங்கி கடற்கரையில் புதிய வசதி

இறப்புக்குப் பிந்திய சடங்குகளைச் செய்ய சாங்கி கடற்கரையில் புதிய வசதி

1 mins read
9c04f7a2-4faa-45e2-8116-79fc982f22a1
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இறப்புக்குப் பிந்திய சடங்குகளை மேற்கொள்ள சாங்கி கடற்கரையில் புதிய வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்து இருக்கிறது.

விரிவான மறுஆய்வு மற்றும் உரியவர்களுடன் ஆலோசித்தபின் சாங்கி கடற்கரையில், 2வது கார் நிறுத்தப் பூங்காவிற்குப் பின்னால் உள்ள இடம், இறப்புக்குப் பிந்திய சடங்குகளைச் செய்யும் இடமாக ஒதுக்கப்பட உள்ளது.

ஆயினும், முன்னர் அறிவித்ததுபோல் தானா மேராவில் புதிய இடுகாடு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் படாது என்று ஓர் அறிக்கை மூலம் வாரியம் நேற்று தெரிவித்தது.