மீண்டும் போயிங் 737-8 மேக்ஸ் ரக விமானங்கள்

மீண்டும் போயிங் 737-8 மேக்ஸ் ரக விமானங்கள்

1 mins read
96f0ac19-d3e8-4966-8a2c-91162592566c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான ஆறு போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களில் முதலாவது விமானம் சாங்கி விமான நிலையத்திற்கு நேற்று மீண்டும் வந்து சேர்ந்தன.

அந்த ரக விமானங்கள் ஐந்து மாதங்களுக்குள் இரு விபத்துகளைச் சந்தித்ததால், அந்த ஆறு விமானங்களும் கடந்த ஆண்டு மார்ச்சில் இருந்து ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், அவற்றை மீண்டும் இங்கு கொண்டு வர சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.