பொங்கோல் நார்த்ஷோர் பிடிஓ பேட்டையில் புதிய பல வசதிகள்

பொங்கோல் நார்த்ஷோர் பிடிஓ பேட்டையில் புதிய பல வசதிகள்

2 mins read
a03a9c3d-21e1-4f07-b655-20cf991cd01c
நார்த்ஷோர் ரெசிடன்சஸ் I மற்றும் IIல் வசிப்பவர்கள், கார் பேட்டைகளில் Parking@HDB என்ற புதிய விவேக தொழில்நுட்ப வசதியை முதன்முதலாகப் பெறுவார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொங்­கோல் நார்த்­ஷோர் பேட்­டை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய விவேக திட்ட வீடு­க­ளைச் சேர்ந்த 1,400க்கும் மேற்பட்ட குடும்­பங்­கள் புதிய நவீன வச­தி­களை அனு­ப­விக்­க­லாம்.

தாங்­கள் பயன்­ப­டுத்­தும் மின்­சா­ரத்­தின் அளவை அவர்­கள் கண்­கா­ணிக்க முடி­யும். அந்­தப் பேட்டை­யில் வசிக்­கக்­கூ­டிய குடும்­பங்­களில் சுமார் 85 விழுக்­காட்­டி­னர் அதா­வது 1,192 வீட்டு உரி­மை­யா­ளர்­கள் டிசம்­பர் 14 நில­வ­ரப்­படி தங்­கள் வீடு­களுக்­கான சாவி­க­ளைப் பெற்று இருக்­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் இத்­த­கைய வீவக விவேக வீடு­களில் குடி­யேறி அவற்­றின் வச­தி­களை முதன்­மு­த­லாக அனு­ப­விக்­கும் குடும்­பத்­தி­னர் இவர்­க­ளா­கவே இருப்­பார்­கள்.

அங்கு 12 புளோக்­கு­களில் மொத்­தம் 1,402 வீடு­கள் கட்­டப்­பட்டு இருக்­கின்­றன. அந்த வீடு­களில் புதிய நவீன விவேக மின் சாத­னங்­கள் பொருத்­தப்­பட்டு இருக்­கின்­றன.

அவற்­றைக்­கொண்டு குடும்­பத்­தி­னர் தாங்­கள் பயன்­ப­டுத்­தும் மின்­சா­ரம் எவ்­வ­ளவு என்­பதை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து செலவை மிச்­சப்­ப­டுத்­த­லாம் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் தெரி­வித்­தது.

பொங்­கோல் நார்த்­ஷோ­ரில் இதர பல விவேக அம்­சங்­களும் ஒருங்­கி­ணைக்கப்­பட்டு இருக்­கின்­றன. அங்கு வசிக்­கக்­கூ­டிய மக்­கள் புதிய தலை­முறை கார் பேட்டை முறையை முதன்­மு­த­லா­கப் பயன்­படுத்­து­வர்.

இந்த விவேக முறை ஐந்து புதிய அம்­சங்­க­ளைக் கொண்டு இருக்­கிறது. அவற்­றில் நான்கு அம்­சங்­கள் 2021 ஜன­வரி 4ஆம் தேதி ஒரு கார் பேட்­டை­யில் பரி­சோ­தித்து பார்க்­கப்­படும். அந்தப் பேட்­டை­யில் 1,000 கார்­களை நிறுத்தி வைக்­க­இடங்கள் இருக்கின்றன.

அந்­தப் பேட்­டை­யின் உள்ளே செல்­ல­வும் வெளியே வர­வும் வழி­யில் கைகாட்டி தடுப்பு எது­வும் இருக்­காது. வாக­னங்­க­ளின் பதிவு எண்ணை படச்­சா­த­னங்­கள் பதிவு செய்­து­வி­டும்.

அந்த கார் பேட்­டை­யைப் பயன்­படுத்­துவோர் Parking @ HDB என்ற செயலி மூலம் தங்­கள் பற்று, கடன் அட்­டை­யைக் கொண்டு கட்­ட­ணத்­தைச் செலுத்­தி­வி­ட­லாம்.

ஒரு வாக­னம் கார் பேட்­டை­யை ­விட்டு வெளி­யே­றும்போது உரிய கட்­ட­ணம் தானா­கவே கழித்து கொள்­ளப்­படும்.

உடனே அவர்­களுக்குப் பல விவரங்களையும் கொண்ட அதற்­கான தக­வல் வந்து­வி­டும்.

விதி­க­ளுக்கு முர­ணாக வாக­னத்தை நிறுத்­தி­வைத்­தால் அது பற்­றி­யும் தக­வல் தெரி­விக்­கப்­படும்.

கார் நிறுத்­து­வ­தற்­கான காலி இடங்­கள் பற்றி வண்ண விளக்­கு­கள் மூலம் தெரிந்­து­கொள்­ள­லாம். இந்­தப் பரி­சோ­தனை நார்த்­ஷோர் வட்டாரத்தில் உள்ள இதர கார் பேட்­டை­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்று கழ­கம் தெரி­வித்­தது.

விளக்கு வெளிச்­சம், தண்­ணீர்க் குழாய்­கள், மின்­தூக்­கி­கள், கழி­வுப்­பொ­ருள் சேக­ரிப்பு போன்ற மிக முக்­கிய சேவை­க­ளின் செயல்­தி­றனைப் பகுப்­பாய்வு செய்­வ­தற்­கான உணர்­வுச் சாத­னங்­களும் பொங்­கோல் நார்த்­ஷோர் பேட்­டை­யில் அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றன.