புதிய வெள்ளப் பாதுகாப்பு சாதனம் சோதிக்கப்படுகிறது

புதிய வெள்ளப் பாதுகாப்பு சாதனம் சோதிக்கப்படுகிறது

2 mins read
8601c2ee-a40d-44a6-87a0-2755b06a84f6
இந்த நுழைவாயிலில் 'ஃபிளட்கேட்' எனப்படும் வெள்ளப் பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பரு­வ­ம­ழைக் காலத்­தில் கன­மழை, திடீர் வெள்­ளத்­தில் இருந்து பாது­காத்­துக்­கொள்ள பொதுப் பய­னீட்டுக் கழ­கம் புதிய வெள்­ளப் பாது­காப்­புச் சாத­னத்­தைப் பரி­சோ­தித்து வரு­கிறது.

'ஃபிளட்­கேட்' என்று அழைக்­கப்­படும் இச்­சா­த­னம், திடீர் வெள்­ளம் ஏற்­ப­டும்­போது இல்­லங்­க­ளை­யும் கட்­ட­டங்­க­ளை­யும் பாது­காக்க உட­ன­டி­யாக செயல்­ப­டுத்­தப்­படும் என்று கழ­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

வலு­மிக்க எஃகு சட்­டங்­க­ளால் செய்­யப்­பட்டு ரப்­ப­ர் மேற்பூச்சுடன் மடிக்­கக்கூடிய இச்­சா­த­னம், எளி­தில் விரி­வு­ப­டுத்­தப்­ப­ட­லாம். குடி­யி­ருப்பு, வர்த்­தக, தொழிற்­சாலை வளா­கங்­க­ளின் நுழை­வா­யில்­களில் இச்­சா­த­னம் பொருத்­தப்­ப­ட­லாம்.

கட்­டட நுழை­வா­யில்­க­ளின் அக­லத்­திற்­கேற்ப இந்­தச் சாத­னம் வெவ்­வேறு அள­வு­களில் வரு­கிறது. இதன் உய­ரம் 0.68 மீட்­ட­ரா­க­வும் அக­லம் 0.77லிருந்து 1.52 மீட்­ட­ராகவும் இருக்­கும். கடை வாசல் போன்ற அக­ல­மான நுழை­வா­யில்­களுக்கு ஏது­வாக இந்­தச் சாத­னங்­கள் ஒன்­றாக இணைக்­கப்­ப­ட­லாம்.

ஒவ்­வொரு சாத­னத்­தின் விலை, அதன் அள­வைப் பொறுத்து $800 முதல் $2,200 வரை இருக்­கும்.

இதன் செயல்­தி­ற­னைச் சோதிக்க கடந்த செப்­டம்­பர் மாதம் பிரிட்­ட­னில் இருந்து 20 சாத­னங்­கள் வாங்­கப்­பட்­டன. அவற்­றில் 15 சாத­னங்­கள் தற்­போ­தைய பரு­வ­மழை காலத்­தில் அப்­பர் பாய லேபார் சாலை­யில் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளால் சோதிக்­கப்­ப­டு­கின்­றன.

வடக்கு கிழக்கு பரு­வ­மழை காலம் குறைந்­தது ஒரு மாதத்­திற்கு நீடிக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­படு­வதால் கன­மழை கார­ண­மாக தாழ்­வான பகு­தி­களில் திடீர் வெள்­ளம் ஏற்­படும் சாத்­தி­யம் இருப்­ப­தாக கழ­கம் கூறி­யது.

வடக்கு கிழக்கு பரு­வ­மழை காலம் டிசம்­பர் முதல் மார்ச் மாத தொடக்­கம் வரை நீடிப்­ப­தாக சிங்­கப்­பூர் வானிலை ஆய்வு மையத்­தின் இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பிடப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்டு குறு­கிய காலத்­தில் பெய்த கன­மழை கார­ண­மாக சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு இடங்­களில் ஏழு நாட்­க­ள் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது.

பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தைச் சேர்ந்த திரு இயோ கெங் சூன், "தற்­போ­தைய சூழ­லில் திடீர் வெள்ளம் 30 நிமி­டங்­க­ளுக்­குள் வடிந்­து­வி­டு­கிறது. என்­றா­லும், அடிக்­கடி கன­மழை பெய்­வ­தால் வெள்­ளம் ஏற்­படும் சாத்­தி­யம் உள்­ளது. எனவே, அதைச் சமா­ளிக்க நாம் தயா­ராக இருக்க வேண்­டும்," என்று கூறி­னார்.