'பிரேக் இல்லாத சைக்கிள்களை தடை செய்ய வேண்டும்'

1 mins read
4093e4b8-47ab-4643-88de-fe943e92ddf3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'பிரேக்' வசதி இல்­லாத சைக்­கிள்­களை நடை­பா­தை­க­ளி­லும் சாலை­க­ளி­லும் ஓட்­டத் தடை விதிக்க வேண்­டும் என்று உந்து நட­மாட்ட ஆலோ­ச­னைக் குழு பரிந்­து­ரைத்துள்­ளது. அந்தப் பரிந்­து­ரையை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்­டால் சில வகை சைக்­கிள்­கள் தடை செய்­யப்­ப­டக்­கூ­டும். அவற்­றில் ஒன்று 'ஃபிக்ஸ்ட்-கியர்' சைக்­கிள்­கள். இந்த சைக்­கிள்­க­ளுக்கு கைக­ளால் இயக்­கப்­படும் 'பிரேக்' கிடை­யாது. மாறாக, சைக்­கி­ளின் மிதிக்­கட்­டை­யைக் கொண்டே சைக்­கிளை நிறுத்த முடி­யும்.

மேலும், சாக­சம் செய்ய பயன்­படுத்­தப்­படும் 'பிஎம்­எக்ஸ்' ரக சைக்கிள்­களும் பாதிக்­கப்­ப­ட­லாம்.

ஆலோ­ச­னைக் குழு அதன் பரிந்­து­ரை­க­ளைப் போக்­கு­வ­ரத்து அமைச்­சி­டம் நேற்று சமர்ப்­பித்­தது.

"இந்த விவ­கா­ரம் குறித்து பல்­வேறு பங்­கு­தா­ரர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்த பிறகு, பொதுப் பாதை­க­ளி­லும் சாலை­க­ளி­லும் ஓட்­டப்­படும் அனைத்து சைக்­கிள்­க­ளுக்­கும் 'பிரேக்' வசதி இருக்க வேண்­டும் என்று ஆலோ­ச­னைக் குழு பரிந்­து­ரைக்­கிறது," என்று குழு விவ­ரித்­தது.

சைக்­கிள் ஓட்­டு­நர்­க­ளை­யும் பாத­சா­ரி­க­ளை­யும் விபத்­தில் இருந்து பாது­காக்க இது உத­வும் என்று அது கூறி­யது.

'ஃபிக்ஸ்ட்-கியர்' சைக்­கிள்­கள் பெரும்­பா­லும் பொழு­து­போக்­கிற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக ஆலோ­ச­னைக் குழு சொன்­னது. அனு­ப­வ­மில்­லாத ஓட்­டு­நர்­கள் அத்­த­கைய சைக்­கிள்­களை நிறுத்­து­வ­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கக்­கூ­டும் என்று அது குறிப்­பிட்­டது.

ஆலோசனைக் குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் இத்­த­கைய சைக்­கிள்­களை பொதுப் பாதைகளில் ஓட்ட குறைந்தது ஒரு 'பிரேக்'கையாவது பொருத்த வேண்டும்.