நிகழ்ச்சி, சுற்றுலா உடன்பாடுகள்: நிவாரண சலுகைக் காலம் ஒரு மாதம் நீட்டிப்பு

நிகழ்ச்சி, சுற்றுலா உடன்பாடுகள்: நிவாரண சலுகைக் காலம் ஒரு மாதம் நீட்டிப்பு

2 mins read
d577913f-4033-4d68-b27b-554f660c9cf6
நிகழ்ச்­சி­கள், சுற்­றுலா ஒப்­பந்­தங்­க­ள் தொடர்பிலான நிவா­ர­ணச் சலுகைக் காலம் இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நிகழ்ச்­சி­கள், சுற்­றுலா தொடர்­பான ஒப்­பந்­தங்­க­ளைச் செய்­து­கொண்டு அவற்­றைத் திட்­ட­மிட்­ட­படி நிறை­வேற்ற முடி­யா­மல் இருக்­கும் தரப்­பி­ன­ருக்­குக் கூடு­த­லாக ஒரு மாத காலம் நிவா­ர­ணச் சலுகை கிடைக்­கும்.

அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட மற்­றும் அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் எதை­யும் எடுக்க முடி­யா­த­படி மேலும் ஒரு மாத காலம் அவ­காசம் கிடைக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சலுகை நேற்­று­டன் முடிய இருந்­தது. இருந்­தா­லும் ஜன­வரி 31 வரை அது இப்­போது நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

சட்ட அமைச்சு நேற்று இதன் தொடர்­பில் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

"கொவிட்-19 தற்­கா­லிக சட்­டத்­தின்கீழ் கொடுக்­கப்­படும் இத்­த­கைய ஒப்­பந்­தங்­க­ளுக்­கான நிவா­ர­ணச் சலு­கைக் காலம் நீட்­டிக்­கப்­படும். சிங்­கப்­பூர் மூன்­றாம் கட்ட தளர்­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்தி இருக்­கிறது.

"இந்­தச் சூழ­லில் தனிப்­பட்­ட­வர்­களும் நிறு­வ­னங்­களும் கொவிட்-19 சூழலை மறு­ப­டி­யும் மதிப்­பிட்டு தங்­கள் நிகழ்ச்சி அல்­லது சுற்­று­லாத் திட்­டங்­க­ளைத் திரும்­ப­வும் பரி­சீ­லிக்க ஏது­வாக இந்த நீட்­டிப்பு இடம்­பெ­று­கிறது," என்று அமைச்சு அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

இப்­போது மேலும் தளர்­வு­கள் இடம்­பெ­றும் என்­ப­தால் முன்பு செய்து­கொண்ட பயண மற்­றும் நிகழ்ச்­சித் திட்­டங்­களை மாற்­றிக் கொள்ள அதிக வாய்ப்­பு­கள் இருக்­கும் என்­றும் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

எடுத்­துக்­காட்­டாக பெரிய அள­வில் திரு­மண விருந்­துக்கு ஏற்­பாடு செய்த ஒரு குடும்­பம் அதே நாளில் நிகழ்ச்­சியை, குறை­வான செல­வில் சிறிய அள­வில் நடத்­திக்­கொள்ள இணங்­க­லாம். இது நியா­ய­மா­ன­தா­கவே இருக்­கும் என்­றும் அமைச்சு விளக்­கி­யது.

ஒப்­பந்­தம் செய்­து­கொண்­ட­படி நிகழ்ச்­சி­களை கொவிட்-19 கார­ண­மாக நடத்த முடி­ய­வில்லை என்­றால் அது பற்றி சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­கள் பேசி இணக்­கம் காண­வேண்­டும் என்று அமைச்சு வலி­யு­றுத்­தி­யது. இணக்­கம் இல்லை என்­றால் மட்­டுமே நிவா­ர­ணத்­துக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும் என்­றும் சட்ட அமைச்சு தெரி­வித்­தது.

சலு­கைக் காலம் ஜன­வரி 31ல் முடி­வ­டை­யும். அந்த நாளில்­தான் நிகழ்ச்சி மற்­றும் சுற்­றுலா ஒப்­பந்­தங்­க­ளுக்­கான நிவா­ர­ணங்­க­ளுக்­கு­ரிய கடி­தங்­கள் அனுப்­பப்­பட வேண்­டும்.

சட்­டப்­படி, ஒரு தரப்பு மற்­றொன்­றின் சார்­பில் நிவா­ர­ணம் கேட்டு கடி­தம் அனுப்­ப­லாம். இப்­ப­டிச் செய்­யப்­பட்­ட­தும் நிகழ்ச்சிகளுக்­கும் சுற்­று­லாக்­க­ளுக்­கும் செலுத்­தப்­பட்ட முன்­ப­ணத்தை தானா­கவே பறி­ முதல் செய்­து­விட இய­லாது.

ரத்து செய்­வ­தற்­கான கட்­ட­ணம் நியா­ய­மா­ன­து­தான் என்று மதிப்­பீட்­டா­ளர் ஒரு­வர் தீர்­மா­னித்­தால்­தான் அந்­தத் தொகை­யைக் கட்ட வேண்டி இருக்­கும்.

இத்­த­கைய மதிப்­பீட்­டா­ளர்­களைச் சட்ட அமைச்சு நிய­மிக்­கிறது. நிவா­ர­ணத்­திற்­கான கடி­தம் அனுப்­பப்­பட்ட பிற­கும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு இடை­யில் பேச்­சு­வார்த்தை தொடர வேண்­டும் என்­றும் அமைச்சு கூறி­யது.

இணக்­கம் ஏற்­ப­ட­வில்லை என்­றால் நிவா­ர­ணக் காலம் முடிந்த பிறகு இரண்டு மாதம் கழித்து மார்ச் மாதம் 31ஆம் தேதி வாக்­கில் எந்­த­வொரு தரப்­பும் மதிப்­பீட்­டா­ள­ரின் முடி­வுக்கு மனுச் செய்ய முடி­யும்.

வர்த்­தக சாத­னங்­க­ளுக்­கான அல்­லது வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான வாடகை உடன்­பா­டு­கள், தவ­ணைக் கொள்­மு­தல், நிபந்­த­னை­யு­டன் கூடிய விற்­ப­னை­ ஆகிய வற்­றுக்­கான நிவா­ர­ணச் சலு­கைக் காலம் ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­ட­தைப் போல ஜன­வரி 31ஆம் தேதி முடி­வ­டை­யும்.

கட்­ட­டம் கட்டி விற்­ப­வர்­க­ளு­டனான விற்­ப­னைக் கொள்­மு­தல் உடன்­பா­டு­கள், கொள்­மு­த­லுக்­கான விருப்ப உரிமை, கட்­டு­மான உடன்­பா­டு­கள், வழங்­கீட்டு உடன்­பா­டு­கள் ஆகி­ய­வற்­றைப் பொறுத்த வரை நிவா­ர­ணக் காலம் மார்ச் 31ல் முடி­வ­டை­யும்.