புதிய வேலை கலாசாரத்துக்கு வித்திடும் வீட்டிலிருந்து வேலை செய்யும் அணுகுமுறை

கொரோனா அச்­சு­றுத்­தல் கார­ண­மாக வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் அணு­கு­மு­றையைப் பல நிறு­வ­னங்­களும் அமைப்­பு­களும் கடைப்­பி­டித்து வரு­கின்­றன. இது புதிய வேலை­யிட கலா­சா­ர­மாக உரு­வெ­டுத்து வரு­கிறது.

கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து ஜூன் மாதம் வரை கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்­கும் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­போது வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் முறை பெரும்­பா­லான ஊழி­யர்­க­ளுக்­குக் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது.

அத்­தி­யா­வ­சி­ய சேவை ஊழி­யர்­கள் மட்­டும் இதற்கு விதி­வி­லக்கு. கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­ப­டும்­போ­தும் ஊழி­யர்­கள் தொடர்ந்து வீட்­டி­லிருந்து வேலை செய்­யும் அணு­கு­மு­றையைப் பல நிறு­வ­னங்­கள் கடைப்­பி­டிக்­கின்­றன.

ஆனால் இந்த மாற்­றத்தை ஊழி­யர்­கள் சில­ரால் ஏற்க முடி­ய­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு மே மாதத்­தி­லி­ருந்து ஜூன் மாதம் வரை தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மனநல அறி­வி­யல் நிலை­யம் நடத்­திய ஆய்­வில் 1,407 பேர் பங்­கெ­டுத்­த­னர்.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் ஊழி­யர்­களில் 61 விழுக்­காட்­டி­னர் மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­த­னர். அதே வேளை­யில், கொரோனா கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்­ளும் முன்­க­ளப்பணி­யா­ளர்­களில் 53 விழுக்­காட்­டி­னர் மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருப்­ப­தாக தெரி­வித்­த­னர்.

வேலைச் சூழ­லில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்தால் ஆண்­க­ளை­விட பெண்­கள் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆய்­வில் பங்­கெ­டுத்த பெண்­கள் வீட்­டில் இருப்­பது மன­வு­ளைச்­ச­லைத் தரு­வ­தாகக் கூறி­னர்.

வீட்­டில் இருந்­த­வாறு அலு­வ­ல­கப் பணி­களில் ஈடு­ப­டு­வ­து­டன் வீட்டு வேலை­க­ளை­யும் கவ­னிப்­பது இதற்கு முக்­கிய கார­ண­மாக இருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

வீட்­டு­வே­லை­க­ளி­லும் குழந்தைப் பரா­ம­ரிப்­பி­லும் முன்­பை­விட அதி­க ஆண்­கள் ஈடு­ப­டும்­போ­தும் பெண்­கள் இவ்­வாறு உணர்­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

24 மணி நேர­மும் குடும்­பத்­தோடு இருப்­ப­தும் சில­ருக்கு மன­வு­ளைச்­ச­லைத் தந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்­கும் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது குடும்­பத் தக­ராறு, வன்­முறை தொடர்­பான புகார்­கள் அதி­க­ரித்­ததை சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு

சுட்­டி­யது.

எப்­போ­தும் பெற்­றோ­ரு­டன் இருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டதை அடுத்து, சுதந்­தி­ரம் பறி­போய்­விட்­ட­தா­கக் கூறி இளை­யர்­கள் சிலர் வீட்­டை­விட்­டுச் சென்­ற­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் கடந்த ஆண்டு ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து அக்­டோ­பர் மாதம் வரை அழைப்­பு­க­ளின் எண்­ணிக்கை 40 விழுக்­காடு அதிக­ரித்­த­தாக அமைச்­சின் பெரி­ய­வர் பாது­காப்­புச் சேவை­யும் சிறார் பாது­காப்­புச் சேவை­யும் தெரி­வித்­தன.

குடும்­பத்­தி­ன­ரி­டையே ஏற்­பட்ட பிரச்­சி­னை­கள், கண­வன்-மனைவி இடையே ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு போன்­றவை தொடர்­பாகப் பல அழைப்­பு­கள் கிடைத்­த­தாக அமைச்சு கூறி­யது. வன்­முறை நிக­ழ­வில்லை என்­ப­தால் இவை விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை என்று அமைச்சு தெரி­வித்­தது. கூடு­தல் உதவி தேவைப்­பட்­ட­வர்­களை சமூக அமைப்­பு­க­ளுக்கு அமைச்சு அனுப்­பி­ வைத்­தது.

அமைச்­சின் பாது­காப்­புச் சேவை­க­ளால் கடந்த ஆண்டு விசா­ரிக்­கப்­பட்ட புதிய புகார்­க­ளின் சரா­சரி எண்­ணிக்கை 2019ஆம் ஆண்­டைப் போலவே 120ஆக பதி­வா­னது.

வீட்­டில் வேலை செய்­வ­தால் மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளா­ன­வர்­கள் மத்­தி­யில் புதிய வேலை அணு­கு­மு­றை­யால் பல­ன­டைந்­த­வர்­களும் உள்­ள­னர்.

வீட்­டில் இருந்­த­வாறு வேலை செய்­வ­தால் பொதுப் போக்­கு­வ­ரத்­துக்­கான செல­வும் இதர செல­வு­களும் குறைந்­துள்­ளன. அது­மட்­டு­மல்­லாது, நேர­மும் மிச்­ச­மா­கி­யுள்­ள­தாக அமைச்­சின்­கீழ் செயல்­படும் ‘ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்’ மன்­றத்­தின் தலை­வர் திரு இஷாக் இஸ்­மா­யில் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், ஃபுஜிட்சு, ஃபேஸ்புக் போன்ற நிறு­வ­னங்­க­ளைப் போல சிங்­கப்­பூ­ரை சேர்ந்த சில நிறு­வ­னங்­களும் வீட்­டி­லேயே வேலை செய்­யும் அணு­குமு­றையை நிரந்­த­ர­மாக்­கக்­கூ­டும். செல­வி­னத்­தைக் குறைக்க இந்த நிறு­வ­னங்­கள் இவ்­வாறு செய்­யக்­கூ­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது. கடந்த அக்­டோ­பர் மாதம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் நடத்­திய ஆய்­வில் பங்­கெ­டுத்த பத்­தில் எட்டு பேர் வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய, அல்­லது நீக்­குப்­ போக்­குள்ள வேலை ஏற்­பாட்­டுக்கு விருப்­பம் தெரி­வித்­த­னர்.

நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­களை நிரந்­த­ர­மாக்­கும்­படி சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சமூக ஆர்­வ­லர்­களும் அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!