பிரித்தம் சிங்: புத்தாண்டில் பாட்டாளிக் கட்சி மாற்று கொள்கைகள் பற்றி தொடர்ந்து எடுத்துரைக்கும்

பிரித்தம் சிங்: புத்தாண்டில் பாட்டாளிக் கட்சி மாற்று கொள்கைகள் பற்றி தொடர்ந்து எடுத்துரைக்கும்

2 mins read
8d2984ef-2e49-4bfd-b2b6-7d1c3a144e47
-

பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரான பிறகு கட்சி சார்­பில் முத­லா­வது புத்­தாண்டு செய்­தியை வெளி­யிட்ட திரு பிரித்­தம் சிங் (படம்), சிங்­கப்­பூ­ரர்­க­ளின் தேவை­க­ளைப் பிர­தி­நி­திக்­கும் வகை­யில் தமது கட்சி தொடர்ந்து மாற்றுக் கொள்­கை­கள் பற்றி வலு­வாக எடுத்­து­ரைக்­கும் என்று தெரி­வித்­துள்­ளார்.

வாக்­கா­ளர்­க­ளுக்கு ஒரு மாற்­றுக் குர­லாக, சிங்­கப்­பூர் அர­சி­யல் முறையை சம­நி­லைப்­ப­டுத்­தும் ஓர் அர­ணாக பாட்­டா­ளிக் கட்சி தொடர்ந்து மித­மான பாதை­யில் பய­ணிக்­கும் என்று திரு சிங் நேற்று முன்­தி­னம் ஊட­கத்­துக்கு வழங்­கிய தமது செய்­தி­யில் கூறி­யி­ருந்­தார். அவரது கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத் தொகுதியிலும் செங்காங் குழுத் தொகுதியிலும் ஹவ்காங் தனித்தொகுதியிலும் வென்று நாடாளுமன்றத்தில் பத்து இடங்களைப் பிடித்தது.

சுதந்­தி­ரத்­துக்­குப் பிறகு உள்ள அர­சி­யல் களத்­தில் எந்­த­வோர் எதிர்க்­கட்­சி­யும் இவ்­வ­ளவு அதி­க­மான இடங்­கள் பெற்­ற­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதன் கார­ண­மாக பிர­த­மர் லீ சியன் லூங், பிரித்­தம் சிங் எதிர்­த­ரப்­பின் தலை­வர் என்ற புதிய பத­வியை அளித்து கௌர­வித்­தார்.

அப்­போது பேசு­கை­யில் திரு லீ, நாடா­ளு­மன்­றத்­தில் அதி­க­மான மாற்­றுக் குரல்­கள் ஒலிக்க வேண்­டும் என்­பதை தேர்­தல் முடி­வு­கள் காட்­டு­கின்­றன என்­றார். தங்­கள் கட்­சிக்கு ஆத­ர­வ­ளித்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்்த திரு சிங் தமது செய்­தி­யில், "பொதுத் தேர்­தல் 2020ல் பாட்­டா­ளிக் கட்­சிக்­குக் கிடைத்த ஆத­ர­வுக்கு நன்றி தெரி­விக்க கட­மைப்­பட்­டுள்­ளோம்.

"அத்­து­டன் வாக்­கா­ளர்­கள் எங்­கள் மீது நம்­பிக்­கைக்­குப் பாத்­தி­ர­மாக நாங்­கள் கடு­மை­யாக உழைத்து, சிங்­கப்­பூ­ரில் சம­நி­லை­யான, பன்மை அர­சி­யலை நிலை­நி­றுத்த பாடு­ப­டு­வோம்," என்­றார்.

கடந்த ஆண்டு பாட்­டா­ளிக் கட்சி குறைந்­த­பட்ச சம்­ப­ளம், நீதிக்­கான அணு­கலை விரி­வு­ப­டுத்­து­தல், சிங்­கப்­பூ­ரின் நிதி இருப்­பின் பயன்­பாட்டை மேம்­ப­டுத்­து­வது போன்­றவை தொடர்­பில் யோச­னை­களை நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைத்­ததை திரு சிங் நினை­வு­கூர்ந்­தார்.

"கொவிட்-19 கொள்­ளை­நோய் பல­ரது வாழ்­வா­தா­ரங்­க­ளைப் பாதித் தது­டன், சமூ­கத்­தில் ஒரு­வித அச்­சத்­தை­யும் நிலை­யில்­லாத்­தன்­மை­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

"பிறந்­தி­ருக்­கும் புத்­தாண்­டும் ஒரு மலர் படுக்­கை­யைப் போல் இருக்­காது. குறிப்­பாக, பொரு­ளி­ய­லின் சில துறை­கள் இன்­னும் மீட்சி காணா­மல் இருக்­கிறது. மக்­களில் சிலர் தங்­கள் வேலை­களை இழந்­துள்­ள­னர், சிலர் சம்­பள வெட்டை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர்," என்று திரு சிங் விவ­ரித்­தார்.

கடந்த ஓராண்டு காலத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் காட்­டிய மீள்­தி­ற­னுக்­கும் சமூக ஒற்­று­மைக்­கும் நான் தலை வணங்­கு­கி­றேன். ஒரு பெரும் புய­லைக் கடந்­து­விட்ட ஒன்­று­பட்ட மக்­களில் நானும் ஒரு­வன் என்று சொல்­லிக்­கொள்­வ­தில் பெரு­மை­கொள்­கி­றேன். அடுத்த கட்ட சவால் களை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்," என்றார் திரு சிங்.