ஊழியர்களுக்கு புதிய சீருடையையும் குப்பை சேகரிப்புக்கு புதிய வாகனங்களையும் அறிமுகப்படுத்திய 'செம்ப்வேஸ்ட்'

ஊழியர்களுக்கு புதிய சீருடையையும் குப்பை சேகரிப்புக்கு புதிய வாகனங்களையும் அறிமுகப்படுத்திய 'செம்ப்வேஸ்ட்'

2 mins read
ed637fc5-221d-48dd-b859-57772b08a466
(இடமிருந்து) தங்கள் புதிய சீருடையில் செம்ப்வேஸ்ட் நிறுவனத்தின் சேவைத் தலைவர் லிம் பெங் சூன், சேவைத் தூதர்கள் சதீஷ் காளிமுத்து, முகம்மது ஃபாஹ்மி அஸிஸி. அவர்களுக்கு அருகில் குப்பை சேகரிப்பதற்கான புதிய லாரி. படம்: செம்ப்வேஸ்ட் -

குப்பை நிர்­வாக சேவை வழங்­கும் செம்ப்­வேஸ்ட் நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள் தங்­கள் சீருடை மெல்­லிய துணி கொண்டு தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். சாலை­களில் பணி­யாற்­றும்­போது தங்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­யும் வகை­யில் தங்­கள் சீரு­டை­யில் ஒளிப் பட்­டை­கள் பொருத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டும் என்­று விருப்­பப்­பட்­ட­னர்.

தங்­க­ளின் பச்சை, ஆரஞ்சு நிற சீரு­டையை மறு­வ­டி­வ­மைக்­கும் முறை வந்­த­போது அவர்­கள் தங்­கள் கருத்­து­களை வெளிப்­ப­டுத்­தி­னர். முன்­பி­ருந்த 'டெனிம்' காற்­சட்­டைக்­குப் பதில் எடை குறை­வான, வானி­லை­யைத் தாக்­குப்­பி­டிக்­கக்­கூ­டிய பருத்­தி­யி­லான காற்­சட்­டைக்கு மாற்­றப்­பட்­டது.

சுமார் 600 ஊழி­யர்­கள் அணி­யக்­கூ­டிய அந்­தக் காற்­சட்­டை­யில் ஊழி­யர்­க­ளின் பொருட்­கள் வைப்­ப­தற்கு போதிய இட­முண்டு. முன்பு காற்­சட்­டை­யின் முழங்­கால் பகு­தி­யில் பொருத்­தப்­பட்­டி­ருந்த ஒளிப்­பட்டை இப்­போது முழங்­கா­லுக்­குக் கீழ் பொருத்­தப்­பட்­டுள்­ளது. ஊழி­யர்­க­ளின் மேற்­சட்டை 'ட்ரை ஃபிட்' துணி­யால் தயா­ரிக்­கப்­பட்­டது. நேற்று தொடங்கி, செம்ப்­வேஸ்ட் நிறு­வ­னம் தனது குப்பை சேக­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு பச்சை, சாம்­பல் நிறங்களில் இரு வகை சீரு­டை­களை வழங்­கி­யுள்­ளது.

"எங்­கள் சீரு­டை­கள் அணி­வ­தற்கு ஏது­வாக இருக்­கும். மாதி­ரிச் சீரு­டை­களை நாங்­கள் அணிந்து எங்­கள் விருப்­பங்­க­ளைத் தெரி­வித்­தோம்," என்­றார் 45 வயது திரு லிம் பெங் சூன். சேவைத் தலை­வ­ராக உள்ள திரு லிம், குப்பை சேக­ரிப்பு லாரி­களை ஓட்­டு­கி­றார். நேற்று முதல் ஓட்­டு­நர்­கள் குப்பை சேக­ரிப்­புக்கு புதிய லாரி­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம். அந்த லாரி­கள் கிள­மெண்டி-புக்­கிட் மேரா பகு­தி­யில் வசிக்­கும் 172,000 குடும்­பங்­க­ளின் குப்­பை­க­ளைச் சேக­ரிக்­கும்.

'செம்ப்­கார்ப் இண்­டஸ்­டி­ரிஸ்' நிறு­வ­னத்­தின் ஓர் அங்­க­மான செம்ப்­வேஸ்ட் தனது செய்­திக் குறிப்­பில், தனது குப்பை சேக­ரிப்பு லாரி­கள் குறை­வான எரி­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­யது. தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யு­டன் குப்பை சேக­ரிப்­பா­ளர்­கள் தங்­கள் பணியை சுமூ­க­மாக நிறை­வேற்­ற­லாம். சீரு­டை­கள் இம்­மாத இறு­திக்­குள் எல்லா ஊழி­யர்­க­ளுக்­கும் கொடுக்­கப்­படும் என்று கூறி­யது.