நாடு முழுவதும் நிலவும் குளிர், மழை

புத்தாண்டு அன்று விடிகாலையில் தொடங்கிய மழை இன்றும் நிற்கவில்லை. வானம் கறுத்தே இருந்தது. காலையில் பெய்த கனமழைஇரவு சற்றுக் குறைந்தபோதிலும் தூறல் நிற்கவில்லை. பாசிர் ரிஸ், சாங்கி ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான மழை பதிவானது.

ரோச்சோர் கால்வாய் உள்ளிட்ட பல கால்வாய்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. ஆகக் குறைந்த வெப்பநிலை யாக பிற்பகல் 12 மணிக்கு நியூட்டன் பகுதியில் 21.3 டிகிரி செல்சியஸ் இருந்தது. சிங்கப்பூர் வானிலை நிலையம் முன்னுரைத்திருந்த வெப்பநிலையைவிட இது குறைவு. ஓரிரு நாட்களுக்கு வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என நிலையம் முன்னுரைத்திருந்தது.

இந்த ஆண்டின் முதல் வாரம் முழுக்க இப்படித்தான் மழையும் காற்றுமாகவே இருக்கும் என்று இந்நிலையம் தெரிவித்துள்ளது.

“ஒரே நாளில் பெய்த ஆக அதி களவு மழை சாதனை முறியடிக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உள்ளது,” என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் அறிவியல், தொழில்நுட்பம், சமூகவியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் வின்சன்ட் சோ கூறினார். வழக்கமான வானிலை அளவீட்டின்படி ஜனவரி மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிகளவு மழை 216.2 மில்லி மீட்டர். தானியங்கி வானிலை நிலையங்களின் கணக்குப்படி இது 238.2 மில்லி மீட்டர்.

“நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, சாங்கி விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் 159 மி.மீ மழை பெய்துள்ளது. பருவமழை இன்று வரையில் குறையாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சாதனை முறியடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன,” என்று அவர் நேற்று ஒரு டுவீட் பதிவில் தெரிவித்தார்.

அடுத்த இரு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். நாட்டின் பல பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக மழை பொழியும், குளிர்ந்த பருவநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை எட்டக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!